1 கப் தண்ணீரை ஊற்றி விட்டாலே போதும். உங்களுடைய டாய்லெட் அப்படியே நிமிடத்தில் புத்தம் புதுசு போல ஜொலிக்கும். இந்த சோப்பு ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

toilet-soap-bar
- Advertisement -

பொதுவாகவே பாத்ரூமையும் டாய்லெட்டையும் சுத்தம் செய்வது என்பது இல்லத்தரசிகளுக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒரு விஷயம்தான். அவ்வளவு எளிதில் இந்த வேலையை செய்ய முடியாது. நிச்சயமாக கை வலிக்க பிரஷ் போட்டு தேய்த்தால் மட்டும் தான் நம்முடைய குளியலறையையும் கழிவறையையும் சுத்தம் செய்ய முடியும். இந்த வேலையை எளிமையாக மாற்ற ஒரு சின்ன குறிப்பு உங்களுக்காக. இந்த குறிப்பை படித்து முயற்சி செய்து பாருங்கள். பிடித்திருந்தால் இதே குறிப்பை பின்பற்றி உங்களுடைய கழிவறை குளியறலயை சுலபமாக சுத்தம் செய்து கொள்ளலாம்.

இந்த குறிப்புக்கு நமக்கு துணி துவைக்க கூடிய சோப்பு, எலுமிச்சம் பழம், ஆப்ப சோடா, கல் உப்பு, இந்த 4 பொருட்கள் தேவை. துணி சோப்பை ஒரு கிரேட்டரில் நன்றாக துருவி வைத்துக்கொள்ளுங்கள். சோப்பு தூள் போல நமக்கு கிடைத்துவிடும். எலுமிச்சம் பழத்திலிருந்து எலுமிச்சம் பழச்சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு சரியான அளவு என்று பார்த்தால் துருவிய சோப்பு 1/4 கப், பழுத்த 5 எலுமிச்சம் பழத்தின் சாறு, கல்லுப்பு 1 கைப்பிடி அளவு, ஆப்ப சோடா 1 கைப்பிடி அளவு, 1 லிட்டர் அளவு தண்ணீருக்கு இந்த அளவுகளில் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் தயாராக எடுத்து வைத்திருக்கும் சோப்பு துருவல், எலுமிச்சை பழச்சாறு, ஆப்ப சோடா, கல் உப்பு, இந்த நான்கு பொருட்களை ஒன்றாக போட்டு கலந்து விட்டு 1 லிட்டர் அளவு தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து இந்த கலவையில் ஊற்றி நன்றாக கரைக்க வேண்டும். சோப்பும் மற்ற பொருட்களும் கரைந்து ஆறிய பின்பு இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு தேவையான கிளீனிங் லிக்விட் தயார்.

இதை எப்படி பயன்படுத்துவது. உங்களுடைய குளியலறை நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். அதாவது குழந்தைகள் கணவர் எல்லாம் வேலைக்கு ஸ்கூலுக்கு சென்ற பின்பு சிறிது நேரம் பாத்ரூம் கதவை திறந்து வைத்து உங்களுடைய குளியலறை கழிவறையை காய வைத்து விடுங்கள். அதன் பின்பு நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த லிக்விடை குளியலறை கழிவறையில் எல்லா இடங்களிலும் படும்படி தெளித்து விடலாம், அல்லது ஸ்பிரே செய்துவிடலாம் ஸ்ப்ரே செய்துவிட்டு, ஒரு துடப்பத்தை வைத்து அல்லது பிரஷ் வைத்து எல்லா இடங்களிலும் தடவி விட்டு விடுங்கள்.

- Advertisement -

இது 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் நன்றாக அப்படியே தரையில் ஊறட்டும். டாய்லெட்டிலும் ஊறட்டும். அதன் பின்பு ஃபோர்ஸ் ஆக, அதாவது வேகமாக வெறும் தண்ணீரை ஊற்றி விட்டாலே பாத்ரூமில் இருக்கும் கறைகளும் அழுக்கும் நாற்றமும் சுத்தமாக நீங்கிவிடும். (இப்படி இந்த லிக்விடை குளியலறையில் இரவு முழுவதும் ஊற்றி, ஊற வைத்து மறுநாள் காலை கூட தண்ணீரை ஊற்றி கழுவி விடலாம்.)

இதையும் படிக்கலாமே: பவுடரை முகத்துக்கு போட்டா பளிச்சென்று வாசனையா இருக்கும் அப்படின்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்த பவுடரை வச்சு வீட்டையே வாசனையா மாற்ற முடியும் அது உங்களுக்கு தெரியுமா? வாங்க அதையும் தெரிஞ்சுக்கலாம்.

உங்களுடைய கழிவறை குளியல் அறையில் மிகவும் விடாப்பிடியான கறைகள் படிந்திருந்தால் லேசாக ஒரு தென்னந்துடைப்பத்தை வைத்து அல்லது டாய்லெட் கழுவும் பிரஷை வைத்து தேய்த்தாலே சுலபமாக நீங்கிவிடும். ரொம்பவும் கஷ்டப்பட்டு அழுத்தம் கொடுத்து தேய்த்து தேய்த்து கழுவ வேண்டும் என்ற வேலையும் இருக்காது. ஹர்பிக் பாத்ரூம் லிக்விட் போன்ற கிளீனிங் பொருட்களை வாங்கும் செலவை விட இந்த லிக்விட் தயார் செய்ய ஆகும் செலவு மிக மிக குறைவுதான். பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்திருக்கும் இந்த லிக்விட் இரண்டு மாதத்திற்கு கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். குறிப்பு பிடிச்சவங்க முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -