பூமிக்கு அடியில் உள்ள கைலாசநாதர் கோவில் – வீடியோ

Kailasa temple

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா குகை கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது கைலாசநாதர் கோவில். ஒரு பெரும் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ள இந்த கோவிலானது பூமிக்கு அடியில் இருப்பது போல காட்சி அளிக்கிறது. முதலாம் கிருஷ்ணன் என்னும் ராஷ்டிர குடா மன்னரின் காலத்தில் இந்த கோவில்கள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதோ அதன் வீடியோ.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

சிவபெருமானின் கைலாய மலையை ஒத்த இந்த கோவில் வடிவமைக்க பட்டுள்ளது. ஒன்றை கல்லால் ஆனா இந்த கோவிலை கட்டிமுடிக்க கிட்டத்தட்ட 400,000 டன் எடையுள்ள பாறை குடையப்பட்டுள்ளது. இந்த கோவிலை கட்டி முடிக்க சில தலைமுறைகள் ஆகி உள்ளன. தலைமுறைகளை கடந்து இந்த கோவிலின் வடிவமைப்பை புரிந்து அதற்கேற்ப சிற்பிகள் இரவு பகல் பாராமல் வேலை செய்துள்ளார்.

இந்த கோவிலின் நிலப்பரப்பானது சுமார் 250அடி நீளமும் 150அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த கோவிலின் சில பகுதிகளை பல்லவ மன்னர்களும் கட்டியுள்ளார். சில தலைமுறைகளை கடந்ததால் பல மன்னர்கள் இந்த கோவிலை கட்டி முடிக்க அரும்பாடு பட்டுள்ளனர்.