கையில் காசே இல்லையா? அப்போ உங்க பாக்கெட்ல இத வச்சிக்கோங்க! காசு தானாகவே சேரும்.

பணம் என்பது இன்று எவ்வளவு பிரதானமானது! எவ்வளவு தேவையானது? என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஒருவர் எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும், அவரிடம் பணம் இல்லை என்றால் அவரை யாரும் மதிப்பது இல்லை. பணமே வாழ்க்கை இல்லை என்றாலும் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது என்பதும் உண்மை தான். இத்தகைய பணத்தை எப்படி நம்மிடம் தக்க வைத்துக் கொள்வது? என்னும் சூட்சுமத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

money4

பணத்தை சம்பாதிக்க அனைவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். யாருமே சோம்பேறித்தனமாக அமர்ந்து வேலையே செய்யாமல் பணம் வர வேண்டும் என்று வேண்டுவது இல்லை. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் கையில் நிற்கவில்லையே என்கிற ஏக்கம் தான் இருக்கும். ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்கிற கதை தான்! இன்று பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை. பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும், லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணத்தை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் அங்கு தரித்திரம் குடி கொண்டுள்ளது என்று அர்த்தம்.

நம்முடைய சொந்த தேவைக்கு நாம் எண்ணிய விருப்பத்திற்கு செலவு செய்ய முடியாத பணம் இருந்தும் பிரயோஜனம் இல்லை. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டும் போதாது! நினைத்த நேரத்தில், நினைத்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு பணம் உங்களிடம் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன்! அவ்வளவு சம்பாதிக்கிறேன்! ஆனால் என்னிடம் கையில் காசே தங்கவில்லை என்று புலம்புவதை விடுத்து அதற்கு என்ன செய்யலாம்? என்பதை யோசிக்கலாம்.

gajalakshmi

பணத்திற்கு அதிபதியாக விளங்கும் மஹாலக்ஷ்மி தாயார் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர். இவர் சுத்தமான இடங்களில் மட்டுமே வாசிக்க கூடியவர். அசுத்தம் நிறைந்த இடங்களில் மகாலட்சுமி ஒருபொழுதும் வாசம் செய்வது இல்லை. உங்கள் வீட்டிலும், நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும் சுத்தம் இருப்பது அவசியமாகும். வீட்டையும், பணம் வைக்கும் இடத்தையும் முதலில் சுத்தமாகவும், வாசனை மிகுந்ததாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். உழைப்பே இல்லாமல் பணம் வரும் என்று கூறவில்லை உழைப்புடன் கூடிய சூட்சும ரகசியங்களையும் தெரிந்து வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்பது தான் உண்மை.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் பிரச்சினைக்குரிய கிரகங்கள் இருக்கும் பொழுது என்ன செய்தாலும் பணம் அவர்களிடம் தங்குவது இல்லை. பணத்திற்காக அலைவது, அவமானப்படுவது என்று பல்வேறு துன்பங்களை அவர்கள் சந்திப்பார்கள். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் நம் தேவைக்காக பயன்பட வேண்டும் என்கிற ஆசை இருப்பவர்கள் மகாலட்சுமி தேவியை துதியுங்கள்.

dhanalakshmi

மகாலட்சுமியின் படத்தை சிறிய அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் மகாலட்சுமியின் மூல மந்திரம் எழுதி இருப்பது இன்னும் சிறப்பு. உங்களுடைய வீட்டின் பூஜை அறையில் மகாலட்சுமி தேவியின் இந்த படத்தை வைத்து அதற்கு முன்பு குங்குமத்தால் 9 முறை அர்ச்சனை செய்து மூல மந்திரத்தை துதியுங்கள். பின்னர் அந்த படத்தை உங்களுடைய மணி பர்ஸ் அல்லது பணம் வைக்கும் இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்களுடன் அப்படம் இருப்பது போன்று ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த படம் வைத்திருக்கும் இடத்தில் சிறிது பச்சை கற்பூரத்தை வைத்துக் கொள்ளுங்கள் போதும்! வேறு எதுவுமே வேண்டாம் நீங்கள் உழைக்கும் பணம் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக மாறும்.