சரும நிறத்தை அதிகரிக்கும் கல் உப்பு

kaluppu beauty tips
- Advertisement -

சரும நிறத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்படாத நபர்களே இருக்கமாட்டார்கள். என்னதான் நிறமாக இருந்தாலும் மேலும் நிறத்தை அதிகரிக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். அப்படி சரும நிறத்தை அதிகரிப்பதற்கு கெமிக்கல் நிறைந்த பொருட்களை தான் பலரும் உபயோகப்படுத்துகிறார்கள். இது முற்றிலும் தவறான ஒரு செயல்.

என்னதான் கெமிக்கல் நிறைந்த பொருட்களை நாம் நம்முடைய சருமத்தில் உபயோகப்படுத்தி சரும நிறத்தை அதிகரித்தாலும் அதனால் பல விதமான பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இயற்கையான முறையில் நமக்கு கிடைக்கக்கூடிய அதுவும் அனைவரின் சமையல் அறையிலும் இருக்கக்கூடிய கல்லுப்பை வைத்து சரும நிறத்தை எப்படி அதிகரிப்பது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்கள் அனைத்துமே மிகவும் அற்புதமான சத்து நிறைந்த பொருட்களாக திகழ்கிறது. அந்த பொருட்கள் நம்முடைய உடலுக்கு எந்த அளவிற்கு நன்மையை தருகிறதோ அதே அளவிற்கு நம்முடைய சருமத்திற்கும் நன்மையை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் கல் உப்பை பற்றி பார்ப்போம்.

பொதுவாக சமையலுக்கு உபயோகப்படுத்துவோம். அதே போல் ஆன்மீக ரீதியாகவும் கல் உப்பை அதிக அளவில் உபயோகப்படுத்துகிறோம். இந்த கல்லுப்பை அழகு குறிப்பிற்காகவும் நம்மால் பயன்படுத்த முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

- Advertisement -

ஒரு ஸ்பூன் கல்லுப்பை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேனை ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் புத்துணர்ச்சியுடன் திகழும். இந்த முறையை வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற வீதம் செய்ய வேண்டும். இதை செய்து பிறகு அரை மணி நேரம் விட்டு விடுங்கள்.

அரை மணி நேரம் கழித்து இரண்டு ஸ்பூன் கல்லுப்பை எடுத்து அதனுடன் தேவையான அளவு பன்னீரை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதை அரை மணி நேரம் அப்படியே முகத்தில் விட்டு விட வேண்டும். பிறகு முகத்தை குளித்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சரும நிறம் அதிகரிப்பதை நம்மால் உணர முடியும்.

- Advertisement -

இந்த இரண்டு முறைகளையும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். முக்கிய குறிப்பு பருக்கள் இருக்கும் நபர்கள் இந்த கல்லுப்பு அழகு குறிப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பருக்களில் இந்த கல்லுப்பு பட்டு மேற்கொண்டு பருக்கள் பரவுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: வெயிலினால் கருத்த முகத்தை உடனே வெள்ளையாக மாற்ற ஃபேஸ் பேக்

அனைவரின் இல்லங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய கல் உப்பை இந்த முறையில் நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

- Advertisement -