எதிரிகளை துவம்சம் செய்யும் கால பைரவர் வழிபாடு இப்படி செய்யுங்கள்!

kala-bairavar-sevvarali
- Advertisement -

நம்முடைய வளர்ச்சிக்கு ஏற்ப எதிரிகளும், தீயவர்களும் நம்மை சுற்றி புதிது புதிதாக முளைத்துக் கொண்டு தான் இருப்பார்கள். அவர்களால் நமக்கு வரும் துன்பங்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். இது தொழில், வியாபாரம் போன்றவற்றால் வரும் போட்டி, பொறாமைகள் மட்டுமல்ல. குடும்பத்திலும் இருக்கலாம். எந்த ரூபத்தில் நமக்கு எந்த வயதில் பகைவர்கள் இருந்தாலும் அவர்களை துவம்சம் செய்ய காலபைரவர் வழிபாடு உறுதுணையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

kalabairavar

காலபைரவர் தன்னிடத்தில் யார் வருவார் என்று எப்போதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பார். அவரின் திருவடியை சரண் அடைந்தவர்களுக்கு காக்கும் கடவுளாக ஈசனின் சக்தியாக எப்போதும் நம்மிடத்தில் இருப்பாராம். நமக்கு வாழ்க்கையில் மன தைரியம் உண்டாகவும், எதிரிகள் தொல்லை நீங்கவும், புது தெம்பு பிறக்கவும் நாம் வணங்க வேண்டிய ஒரே கடவுள் என்று பார்த்தால் அது காலபைரவர் ஒருவர் தான். சிவனின் சொரூபமாக இருக்கும் காலபைரவர் பக்தர்களுக்கு வேண்டியதை வேண்டியபடி கொடுக்க ஆயத்தமாக இருப்பார்.

- Advertisement -

நமக்கு தொழில் முறையில் நிறைய போட்டிகள் இருக்கும். யார் எதை கைப்பற்றுவது? எப்படி முன்னேறுவது? என்பதைப் பற்றிய சிந்தனை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதே புதிதாக தொழில் துவங்குபவர்கள் கூட இத்தகைய சிந்தனையுடன் தான் கொண்டு இருப்பார்கள். ஒரு தொழில் துவங்குவதற்கு எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கும்? புதிய பகைவர்களை இதனால் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அதனை எதிர்கொள்ளும் தைரியம் கால பைரவர் வழிபாடு உங்களுக்கு கொடுக்கும்.

kalabairavar

வியாபாரம் செய்பவர்கள் தங்களுடைய வியாபாரத்தில் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் தெரியுமா? வாடிக்கையாளர்களை கவர்வதற்கு, ஏற்கனவே இருக்கின்ற வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், நிறைய போட்டி பொறாமைகளை தாண்டி முன்னேற்றம் அடையவும் தினம் தினம் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஒருமுறை வளர்ச்சிப் பாதையை எட்டி விட்டால் அதன் பிறகு வரும் கண் திருஷ்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அதற்கு காலபைரவர் வழிபாடு ஒன்றே நல்ல தீர்வாக இருக்கும்.

- Advertisement -

arali

தொழில், வியாபாரம் மட்டுமல்ல, குடும்பத்தில் இருக்கும் பகை நீங்கவும், உங்கள் மீது பொறாமை படும் சில வேண்டாத நபர்களை துவம்சம் செய்ய கால பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாள் மிகவும் உகந்த நாளாக இருக்கிறது. இந்த நாளில் வழிபாட்டை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். ஆனால் மற்ற எப்போது வேண்டுமானாலும் நாம் தாராளமாக சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நின்று குடும்பத்துடன் பிரார்த்தனை மேற்கொள்ளலாம். பைரவருக்கு உகந்த அரளிப்பூவை சாற்றி, பைரவாஷ்டகம் படிக்கலாம். பைரவருக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமாக தயிர்சாதம் இருக்கிறது.

curd-rice

குடும்பத்தோடு மாதம் ஒருமுறையாவது சிவன் கோயிலுக்கு சென்று பைரவர் சன்னதியில் தயிர் சாதம் பக்தர்களுக்கு தானமாக வழங்கலாம். அரளிப்பூவை மாலையாக அல்லது அர்ச்சனை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல் ஒவ்வொரு மாதமும் நீங்கள் செய்து வந்தால் உங்கள் எல்லா விதமான எதிரிகளும் உங்களை நெருங்க கூட முடியாது. அவர்களின் தொல்லைகள் துவம்சம் ஆகி பெரும் வளர்ச்சியை காண்பீர்கள்.

இதையும் படிக்கலாமே
விளக்கு ஏற்றும் பொழுது கட்டாயம் இதை கடைப்பிடித்தால் வேண்டியது உடனே நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -