விளக்கு ஏற்றும் பொழுது கட்டாயம் இதை கடைப்பிடித்தால் வேண்டியது உடனே நடக்கும் தெரியுமா?

Vilakku-lakshmi
- Advertisement -

ஒவ்வொருவர் வீட்டிலும் விளக்கு ஏற்றுவது என்பது மிகவும் முக்கியமாக கடைப்பிடித்து வரும் ஒரு பக்தி செயலாகும். விளக்கேற்றும் வீடு தான் சுபீட்சம் பெறும். அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை பலரும் அறிந்திருந்தாலும், அதில் நீங்கள் அறியாத சூட்சுமமும் ஒன்று உள்ளது என்பது தான் உண்மை. விளக்கு ஏற்றும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? எப்படி தெய்வங்களை அழைக்க வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vilakku1

பொதுவாக விளக்கை நல்ல நேரம் பார்த்து ஏற்ற வேண்டும். உங்கள் வேலை எல்லாம் முடித்து விட்டு பொறுமையாக வந்து விளக்கேற்றினால், அதில் எந்த பயனும் இல்லை. துர்க்கைக்கு ராகு காலத்தில் தான் விளக்கேற்ற வேண்டும். அது போல் ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் வணங்கும் பொழுது நல்ல நேரத்தில் விளக்கேற்றி வணங்கினால் நாம் நினைத்தது உடனே நடக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

நேரமும் காலமும் செய்யாததை மற்ற எதுவும் செய்வதில்லை என்பது பழமொழி. ஒருவருக்கு நல்ல நேரம் வந்து விட்டால் அவர்களுடைய வாழ்க்கையே வேறு மாதிரி மாறிவிடும். அதுபோல் தான் விளக்கு ஏற்றுவதும் அமைந்துள்ளது. நீங்கள் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றுகிறார்கள்? எப்படி ஏற்றுகிறார்கள்? என்பதைப் பொறுத்தே உங்களது வேண்டுதல் பலிக்கும் என்பார்கள்.

ainthu-muga-vilakku

அந்த வகையில் விளக்கேற்றும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்ப்போம். விளக்கு ஏற்றுவதற்கு முன்னர் ஊதுபத்தியை ஏற்றி அதை பூஜை அறையில் இருந்து தலைவாசல் வரை கொண்டு சென்று உங்கள் மனதில் குலதெய்வத்தையும், விநாயகரையும் முதலில் வணங்கி விட்டு, பின்னர் அனைத்து தெய்வங்களையும் விளக்கில் எழுந்தருளுமாறு அழைக்க வேண்டும்.

- Advertisement -

தலைவாசல் வரை ஊதுபத்தியை கொண்டு சென்ற பின் அப்படியே பின்னோக்கி நடந்து வந்து பூஜை அறையில் என் குலதெய்வமும், விநாயகரும் பின்னர் அனைத்து சுப தெய்வங்களும் இந்த விளக்கில் இப்போது எழுந்தருள வேண்டும் என்று வணங்கி விட்டு தீபமேற்ற வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் நீங்கள் தீபம் ஏற்றும் பொழுது எந்த விதமான காரியத்தடை இருந்தாலும் உடனே நீங்கும் என்பது ஐதீகம்.

kamatchi-vilakku

உங்களிடம் பணம் வீணாக விரயமாகி கொண்டே இருக்கலாம். எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்பவர்கள் பண இருப்பிற்கு இந்த மாதிரி ஊதுபத்தி காண்பித்து தெய்வங்களை அழைத்து விளக்கேற்றி வழிபடலாம். இதுவே குலதெய்வத்தையும், மற்ற இஷ்ட தெய்வங்களையும் அழைக்கும் விதமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. விளக்கேற்றும் நேரத்தில் இது போல் நாம் செய்வதால் பணவரவு தடைபடாமல் வந்து கொண்டே இருக்குமாம். நம்முடைய வேண்டுதல்கள் யாவும் உடனே பலிக்குமாம்.

- Advertisement -

deepam

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் நிச்சயம் இருக்கும். அந்த வேண்டுதல்களை எல்லாம் பலிக்க செய்ய இது போல் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். நெருக்கடியான சூழ்நிலையில் பணம் தேவைப்படும் பொழுது, எடுக்கும் காரியங்கள் தடையில்லாமல் நிறைவேறுவதற்கு, எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறுவதற்கும் இது போல் தெய்வங்களை அழைத்து தீபம் ஏற்றும் பொழுது நல்ல பலன் கிடைக்கும் என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

deepam

ஏன் பின்னோக்கி வரவேண்டும்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். பின்னோக்கி வருவதால் மனம் ஒருநிலையில் இருக்கும். உங்களுடைய எண்ணம் முழுவதும் தெய்வத்தை அழைப்பதில் குறியாக இருக்கும். நாம் அழைத்ததும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வருவது தான் குலதெய்வத்தின் வேலை. குலதெய்வம் வந்து விட்டாலே மற்ற தெய்வங்களும் சுலபமாக தீபத்தில் எழுந்தருளுவார்கள். அதன்பின் நம்முடைய வேண்டுதல்களை வைத்தால் அதை உடனே செய்வார்கள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டின் மேல் மற்றவர்களின் பொறாமை கண்கள் படாமலிருக்க இதை தலைவாசலில் மாதம் 1 முறை கட்டி வையுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -