உங்களின் தீராத கடன் தீர, துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்க இவற்றை செய்யுங்கள்

bairavar
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் 15 திதிகள் வீதம் முப்பது திதிகள் வருகின்றன. இந்த திதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த தினங்களாக இருக்கிறது. அந்த வகையில் எட்டாவதாக வருகின்ற திதி அஷ்டமி திதி ஆகும். வளர்பிறை காலங்களில் வருகின்ற அஷ்டமி வளர்பிறை அஷ்டமி என்றும், தேய்பிறை காலத்தில் வருகின்ற அஷ்டமி தேய்பிறை அஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் அம்சமான பைரவர் மூர்த்தி வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த பைரவ மூர்த்தியின் அருளைப் பெற கால பைரவ ஹோமம் செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

kaala bairavar

சிவபெருமானின் வடிவத்தில் இருந்து தோன்றியவர் காவல் தெய்வமான பைரவர் மூர்த்தியாவார். மொத்தம் 64 வகையான பைரவர்கள் தோன்றினாலும், எட்டுவகையான அவர்கள் மட்டுமே மக்களால் அதிகம் வழிபடப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மக்களுக்கு வாழ்வில் நன்மைகளை ஏற்படுத்தி, அவர்களின் தோஷங்களைப் போக்கி காக்கும் கடவுளாக இருக்கும் காலபைரவர் ஆவார். கால பைரவரின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோம பூஜை தான் கால பைரவ ஹோமம் ஆகும்.

- Advertisement -

உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருந்தும் திதிகளில் இந்த கால பைரவர் ஹோமம் செய்து கொள்வது நல்லது. பைரவர் வழிபாட்டிற்குரிய தேய்பிறை அஷ்டமி தினம் அல்லது தேய்பிறை காலங்களில் வருகின்ற ஏதேனும் ஒரு சுப முகூர்த்த தினத்தில் கால பைரவர் ஹோமம் நீங்கள் விரும்பிய பலன்களை கொடுக்க வல்லதாகும். இந்த மகா வாராஹி ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். வீடுகளில் ஹோமம் செய்வதை விட பைரவர் சந்நிதியில் யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த பைரவ மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

kalabairavar

கால பைரவ ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்கள், பீடைகள் போன்றவற்றை போக்கி நன்மையை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

கால பைரவ ஹோமம் செய்யும் நபர்களுக்கு வீணான மரண பயங்கள் அறவே நீங்கும். அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் சனி கிரக தோஷங்கள், ஆபத்துகள் அணுகாமல் காக்கும். பெருமளவிலான கடன் பிரச்சனையும் விரைவில் தீரும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். பைரவர் துஷ்ட சக்திகளை ஒழிக்கும் தெய்வம் என்பதால் தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். மேலும் எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டின் வாஸ்து தோஷங்களை போக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kala bhairava homam in Tamil. It is also called as Kadan theera pariharam in Tamil or Homangal in Tamil or Homam pooja in Tamil or Homangal palangal in Tamil.

- Advertisement -