உங்கள் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்பட இவற்றை செய்யுங்கள்

vastu
- Advertisement -

மனிதர்கள் அனைவரும் வசிப்பதற்கு அவர்களுக்கென்று ஒரு வீடு அவசியம். வீடு என்பது நாம் மட்டும் வசிக்க மட்டுமில்லாமல் நமது வருங்கால சந்ததிகள் சிறப்பான வாழ்க்கை வாழ வீட்டில் நன்மையான சக்திகள் அதிகம் இருக்கும் படி வீடு கட்ட உதவும் கலை தான் வாஸ்து சாஸ்திரம் கலை. எந்த ஊர் வீடுமே பல்வேறு காரணங்களினால் 100% முழுமையான வாஸ்து விதிப்படி கட்டப்படுவதில்லை என்பதே எதார்த்தம். அப்படி சில வீடுகள் வாஸ்து விதிகள் பின்பற்றபடாமல் கட்டப்படுவதால், வீட்டிற்கு வாஸ்து தோஷம் ஏற்பட்டு அங்கு வசிப்பவர்களுக்கு பலவிதமான இன்னல்களை ஏற்படுத்துகிறது. அப்படி ஏற்படும் வாஸ்து தோஷங்களை போக்கவும், தெய்வீக சக்திகள் வீட்டிற்குள்ளாக குடி புகவும் செய்யவேண்டிய சில எளிய பரிகாரங்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

home

வீட்டில் இருக்கின்ற எதிர்மறை அதிர்வுகள் வெளியேறவும், வாஸ்து தோஷங்கள் நீங்கவும் வீட்டின் வாயிற்படியின் மேலாக ஒரு செம்பு கம்பியை நீளவாக்கில் கட்டி, அதில் புதிய மாவிலைகளை தோரணமாக கட்டி தொங்கவிட வேண்டும். மாமரம் என்பது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு மரமாகும். இந்த மாமரத்தின் இலைகள் வீட்டில் இருக்கின்ற தீய அதிர்வுகளை கிரகித்துக் கொண்டு, நன்மையான சக்திகளை வீட்டிற்குள் பரவச் செய்ய வல்லதாக இருக்கிறது. எனவே தான் அனைத்து தெய்வீக பூஜைகளிலும் மாவிலை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. எப்போதும் மாமரங்களிலிருந்து பறிக்கப்பட்ட மாவிலைகளை மட்டுமே கட்டவேண்டும். செயற்கையாக செய்யப்பட்ட மாவிலைகளை கட்டக்கூடாது. மாவிலைகள் காய்ந்ததும் அந்த இலைகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய இலைகளை அந்த செம்பு கம்பியில் கட்டி வர வேண்டும்.

- Advertisement -

நீங்கள் வசிக்கின்ற வீட்டிற்கு வெளிப்புறமாக இருக்கும் கூரைப் பகுதியில் ஒரு கட்டு நெற்கதிர்களை வாங்கி கட்டி தொங்கவிட வேண்டும். நெற்கதிர்கள் குருவிகளுக்கும், இன்ன பிற பறவைகளுக்கும் சிறந்த உணவாக இருக்கிறது. வீட்டில் கட்டப்பட்டிருக்கும் நெற்கதிர்களை பலவிதமான பறவைகள் வந்து சாப்பிடுவதால் அப்பறவைகள் தெய்வீக ஆற்றல்களை வீட்டிற்குள்ளாக கொண்டு வருகின்றன. அந்த நெற்கதிர்கள் இருக்கும் நெல் தானியங்களை பறவைகள் உணவாக சாப்பிடுவதால் அந்த வீட்டின் அனைத்து வகையான தோஷங்கள், கண் திருஷ்டிகள் போன்றவற்றை அறவே நீக்குகிறது.

வீட்டின் மேற்குப்பகுதியில் நறுமணத்தைப் பரப்பும் ரோஜா, முல்லை, சம்பங்கி, மல்லி போன்ற மலர்ச் செடிகளை வளர்ப்பதால் வீட்டிற்குள்ளாக தெய்வீக சக்திகளை வரவழைக்க செய்யும். மேலும் வீட்டின் வாஸ்து தோஷங்களை நீக்குவதோடு, செல்வப் பெருக்கையும் அங்கு வசிப்பவர்களுக்கு மன அமைதியையும் தரவல்ல ஒரு சிறந்த பரிகார வழிமுறையாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பிறருக்கு கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Home dosha removal in Tamil. It is also called as Vastu dosha pariharam in Tamil or Theeya sakthi vilaga in Tamil or Mana amaithi pera in Tamil or Veetin vastu dosham neenga in Tamil.

- Advertisement -