களத்திர தோஷம் பரிகாரம் கோயில்

kalathra dosham pariharam temple in tamil
- Advertisement -

ஒரு நபரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகிய கட்டங்களில் சூரியன், செவ்வாய் ,சனி, ராகு கேது ஆகிய கிரகங்கள் தனித்தனியாக இருந்தாலும் அல்லது மேற்சொன்ன கட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும், அந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் இருப்பதாக கருதப்படுகின்றது. ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற களத்திர தோஷம் நீங்க செய்ய வேண்டிய களத்திர தோஷ கோயில் பரிகாரம் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

களத்திர தோஷம் நீங்க பரிகார கோயில்

களத்திர தோஷம் ஏற்பட்டு அதனால், திருமண வாழ்வு கிடைப்பதில் சிக்கலை சந்தித்து வருபவர்களுக்கு குலதெய்வ கோயில் தான் முதல் களத்திர தோஷம் பரிகாரம் கோயில் ஆகும். எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற பௌர்ணமி திதியில், உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு சர்க்கரை பொங்கல் வைத்து, படைத்து முறைப்படி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி திதிகளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று, குல தெய்வத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பூக்கள் சாற்றி, தூபங்கள் கொளுத்தி, இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வதால் விரைவிலேயே ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற களத்திர தோஷத்தின் பாதிப்பு குறைந்து, சிறப்பான திருமண வாழ்க்கை அமையும்.

- Advertisement -

ஜாதகத்தில் களத்திர தோஷம் ஏற்பட்டு திருமணம் அமையாமல் தவிப்பவர்களும், திருமணம் நடந்து இல்லற வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்களும், குரு பகவான் ஆதிக்கம் கொண்ட கோயில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்வது நல்லது. அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் – ஏலவார்குழலி சமேத திருக்கோவிலுக்கு சென்று, சிவபெருமானையும், அம்பாளையும் வழிபாடு செய்து அங்கிருக்கும் குரு பகவான் சன்னதிக்கு சென்று, குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மாலை அணிவித்து அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதால், ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற களத்திர தோஷத்தின் தீவிரத் தன்மை குறைந்து, இல்லற வாழ்வு சிறப்படைய குரு பகவான் அருள் புரிவார்.

பொதுவாக எந்த ராசியில், எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் தங்களுக்கு களத்திர தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள கூடிய ஒரு பரிகார தலமாக தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருமணஞ்சேரி அருள்மிகு உதவாகநாதர் – கோகிலா அம்மன் சமேத திருக்கோயில் விளங்குகிறது. திருமணஞ்சேரி திருக்கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று சென்று, கோயிலில் மேற்கொள்ளப்படும் பரிகாரத்தை முறைப்படி செய்வதால் விரைவில் திருமண யோகம் அமையும்.

இதையும் படிக்கலாமே: சந்திரன் பரிகாரம்

களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர், ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் சுக்கிர பகவானுக்குரிய தலமான ஸ்ரீரங்கம் சென்று, ஒரு சொம்பு அளவு வேல் காய்ச்சாத பசும்பாலை அங்கிருக்கும் காவிரி ஆற்றில் விட்டு, பிறகு அந்த ஆற்றில் தலை மூழ்கி குளித்து முடித்துவிட்டு, புத்தாடை அணிந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று, தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதால் களத்திர தோஷம் நிவர்த்தியாகி கூடிய விரைவில் நல்ல முறையில் திருமண வாழ்க்கை அமையும்.

- Advertisement -