சந்திரன் பரிகாரம்

chandran pariharam in tamil
- Advertisement -

நமது இந்திய ஜோதிட சாஸ்திரப்படி நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாக வருகின்ற கிரகம் சந்திரன். ஜாதகத்தில் ஒரு மனிதனின் மன வளம். கற்பனை திறன், ஞாபக சக்தி, கடல் கடந்த பயணம் போன்றவற்றிற்கு காரகனாக சந்திர பகவான் விளங்குகிறார். இத்தகைய சிறப்புகள் கொண்ட சந்திரன் ஒரு சிலரின் ஜாதகத்தில் பலம் இழந்து காணப்படும். இப்படி ஜாதகத்தில் சந்திரன் கெட்டுப் போய் இருப்பவர்களும், சந்திரன் நல்ல நிலையில் இருந்தாலும் சந்திர பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கும் செய்ய வேண்டிய சந்திரன் பரிகாரம் குறித்து இங்கு நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் தோஷம் நீங்க பரிகாரம்

நமது ஜாதகத்தில் இருக்கின்ற சந்திர தோஷம் நீங்கி, சந்திர கிரகம் பலம் பெற்று, வாழ்க்கையில் நல்ல பலன் அடைய விரும்புபவர்கள், ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் சந்திர ஹோரை நேரத்தில் சிவபெருமான் கோவிலுக்குச் சென்று, சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் நவகிரக சன்னிதியில் இருக்கின்ற சந்திரனுக்கு நெல் சமர்ப்பித்து, வெள்ளை மலர் சாற்றி, ஒரு தேங்காயை உடைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அதன் உள்ளே நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வருவதால் சித்தம் தெளிவடையும், ஞாபக சக்தி அதிகரிக்கும், சிறந்த பலம் பெற்று சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் காலங்களில் ஜாதகருக்கு சந்திர பகவானால் மேன்மையான பலன்கள் உண்டாகும். திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ தினங்களில் மேற் சொன்ன பரிகாரத்தை செய்து வருவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

ஜாதகத்தில் சந்திர கிரகம் பலம் பெற்று, வாழ்வில் மேன்மையான பலன் பெற விரும்புபவர்கள் திங்கட்கிழமைகள் தோறும் சந்திரனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. அன்றைய தினம் உங்கள் வீட்டு பூஜை அறையில் சிறிய அளவிலான சிவ – பார்வதி படத்திற்கு மலர் அலங்காரம் செய்து, தூபங்கள் கொளுத்தி, தயிர் சாதத்தை நைவேத்தியம் செய்து, ருத்ராட்ச ஜெபமாலையை கையில் உருட்டியவாறு சிவபெருமானுக்குரிய மந்திரங்களை குறித்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி சிவபெருமான் பூஜை செய்து முடித்த பிறகு வசதி உள்ளவர்கள் வெள்ளை நிற ஆடைகளை பெண்களுக்கு தானம் அளிக்க வேண்டும். மேலும் திங்கட்கிழமைகளில் கோயிலுக்கு செல்பவர்கள், கோயில் குளத்தில் இருக்கின்ற மீன்களுக்கு அரிசி பொறியை உணவாக கொடுத்து வருவதாலும், ஜாதகத்தில் சந்திர கிரகம் பலம் பெற்று நன்மையான பலன்கள் உண்டாகும்.

ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி தினத்தன்று, பூர்ண சந்திரன் முழுமையாக தெரியும் பொழுது அந்த சந்திரனுக்கு கற்பூர தீபாராதனை காட்டி, வழிபாடு செய்த பிறகு, பௌர்ணமி சந்திரன் வெளிச்சத்தில் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி சந்திரனை குறித்து தியானம் செய்வதாலும், ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று வாழ்வில் சிறப்பான பலன்களை பெற முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் பரிகாரம்

ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற விரும்புபவர்கள் சிவபெருமானின் சரிபாதியான பார்வதி தேவியை வழிபாடு செய்வதால் சந்திர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். சந்திர பகவான் மனோ காரகன் என்பதால் மனநலம் குன்றியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வதாலும், ஜாதகத்தில் இருக்கின்ற சந்திரன் பலம் பெற்று சந்திர திசை, சந்திர புக்தி வரும் காலங்களில் இந்த சந்திரன் பரிகாரம் மேலான பலன்கள் ஏற்படும்.

- Advertisement -