இப்படி சுவையான கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் நாக்கில் நீர் சொட்ட சொட்ட இதன் ருசியை ரசித்து சாப்பிடுவார்கள்

raw-banana-fry2
- Advertisement -

திருமணம் என்றாலே அதில் முக்கியமான ஒன்று அனைவரின் மனம் குளிரும் வகையில் வாழ்த்தி செல்வதற்கு அங்கு போடப்படும் சாப்பாடு தான். சாப்பாடு நன்றாக ருசியாக அமைந்துவிட்டால் திருமணத்திற்கு வந்தவர்கள் மனதார வாழ்த்தி செல்வார்கள். அங்கு சாப்பிட்ட உணவை பற்றி எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் பார்க்கும் இடத்திலெல்லாம் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு திருமணத்தில் போடப்படும் உணவு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறு திருமணத்திற்கு செல்லும் மற்றவர்களும் அங்கு பந்தியில் போடப்படும் உணவு எந்தவித சுவையுடன் இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்புகள் உடனே செல்கின்றனர். அவ்வாறு பந்தியில் வைக்கப்படும் சுவையான வாழைக்காய் வறுவலை வீட்டிலும் அதே சுவையில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

food

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 3, வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், தனியாத் தூள் – முக்கால் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, முந்திரி – 5, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வாழைக்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொண்டு, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி வாழைக்காயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, கால் டீஸ்பூன் உப்பு இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.

valakkai

பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பின் தேங்காய் பொடியாக நறுக்கிக் கொண்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் தேங்காயுடன் கால் ஸ்பூன் சோம்பு, 5 முந்திரி, 4 பச்சைமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து, இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 100 கிராம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கிளறி வைத்துள்ள வாழைக்காயை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து இந்த சூடான எண்ணெயில் இருந்து 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

valaikai

பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு மிளகாய்த் தூள், தனியாத் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். பின்னர் இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான வாழைக்காய் வறுவல் தயாராகிவிடும்.

- Advertisement -