வீடே மணமணக்கும் காலிஃப்ளவர் சாம்பாரை ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள். எப்பொழுதும் செய்யும் சாம்பாரின் சுவையை விட மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும்

coliflower
- Advertisement -

வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை செய்யக் கூடிய உணவு வகைகளில் ஒன்றுதான் சாம்பார். சாம்பாரின் சுவையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் இந்த சாம்பார் மிகவும் அருமையாக இருக்கும். எனவே ஒரு சில வீடுகளில் தினமும் ஒரு வேளைக்காவது இந்த சாம்பாரை செய்துவிடுகின்றனர். அவ்வாறு சாம்பாரில் கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கேரட் இது போன்ற காய்கறிகளை சேர்த்து தான் அதிகம் சமைக்கின்றனர். ஆனால் சில கல்யாண வீட்டு சாம்பாரில் காலிஃப்ளவர் சேர்த்து சாம்பார் வைத்திருப்பார்கள். அதன் சுவை இதுவரை இல்லாத தனிப்பட்ட சுவையில் இருக்கும். இந்த காலிஃப்ளவர் சாம்பாருக்கு புது வித சுவையைக் கொடுக்கிறது. இப்படி காலிஃப்ளவர் சேர்த்து செய்யும் சாம்பாரை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

idli-sambar2

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 150 கிராம், காலிஃப்ளவர் சிறியது – 1, சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 3, எண்ணெய் – 4 ஸ்பூன, தனி மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, பூண்டு – 5 பல், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன் உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை சிறிது சிறிதாக உடைத்து கொண்டு, ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கை பொறுக்கும் அளவிற்கு சூட்டுடன் இருக்கும் தண்ணீரை ஊற்றவேண்டும். பின்னர் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து, பின்னர் வெளியே எடுத்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காலிஃப்ளவரில் இருக்கும் சிறிய பூச்சிகள் தண்ணீரில் விழுந்து விடும்.

coliflower

பிறகு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து புளிக்கரைசல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து, 150 கிராம் துவரம்பருப்பை சுத்தமாக கழுவி, குக்கரில் சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் 5 பல் பூண்டு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு 20 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

coliflower

அதன்பின் காலிஃப்ளவரை இவற்றுடன் சேர்த்து கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவேண்டும். இவை நன்றாக வெந்ததும் வேக வைத்த பருப்பை கடைந்து இவற்றுடன் ஊற்றி ஒரு கொதி வந்ததும், கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -