முகத்தை விட கழுத்து பகுதி கருமையாக இருக்கிறதா? இந்த 3 பொருள் இருந்தா போதும் கழுத்தும், முகமும் வெள்ளைக்காரங்க போல வெள்ளை வெளேரென பளிச்சுன்னு இருக்கும்!

neck
- Advertisement -

எப்பொழுதும் முகம் ஒரு நிறத்திலும், கழுத்து பகுதி ஒரு நிறத்திலும் இருந்தால் அது நன்றாக இருப்பதில்லை. வெயிலில் அதிகம் சுற்றித் திரிபவர்களுடைய முகம், கை, கால் ஒரு நிறத்திலும், உடல் ஒரு நிறத்திலும் இருப்பதை பார்க்க முடியும். அதே போல சிலருக்கு முகம் ஒரு நிறத்திலும், கழுத்து பகுதி ஒரு நிறத்திலும் தனித்தனியாக தெரியும். இத்தகையவர்கள் கழுத்து கருமை நீங்க, வெள்ளை வெளேர் என வெள்ளைக்காரர்கள் போல ஜொலிக்க என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் எளிதான அழகு குறிப்பாக இந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக ஆண், பெண் இருபாலரும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்து பகுதிகளுக்கு கொடுப்பதே கிடையாது. ஏதாவது ஒரு ஃபேஸ் பேக் போட வேண்டும் என்றாலும், அதை முகம் முழுவதும் தடவிக் கொள்வார்களே தவிர கழுத்து பகுதிகளை அப்படியே விட்டு விடுவார்கள். இதனால் முகம் பளிச்சென ஜொலித்தாலும், கழுத்து மங்கி போய் மங்கலாக தெரியும். மேலும் அழுக்குகள் சேர சேர கழுத்து பகுதி கருப்பாகவும் மாறிவிடும்.

- Advertisement -

அதிக நகை அணிபவர்களுடைய கழுத்தை பார்த்தால் அப்படியே கருமை படர்ந்து அழுக்கு போல ஒட்டிக் கொண்டிருக்கும். இப்படியாக இருக்கும் பிரச்சனைகளை கூட எளிதாக நீக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? முக கருமை, கழுத்து கருமை போன்றவற்றை ரொம்பவே எளிதாக விரட்டி அடிக்கக்கூடிய ஒரு எளிமையான வீட்டு டிப்ஸ் தான் இது.

முதலில் ஒரு பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். புழுங்கல் அரிசி, பச்சரிசி எந்த அரிசி மாவாக இருந்தாலும் பரவாயில்லை. அரிசி மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பீட்ரூட் சாறு சேர்க்க வேண்டும். உங்களிடம் பீட்ரூட் பவுடராக இருந்தால் இன்னும் நல்லது, அதை சேர்த்துக் கொள்ளுங்கள். பீட்ரூட் பவுடர் சிலர் முகத்திற்காக பேக் போட ஆன்லைனில் வாங்கி வைத்திருப்பார்கள்.

- Advertisement -

இப்போது இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்க்க வேண்டும். பின்னர் இதை ஒரு பேஸ்ட் போல நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்து முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். 20 நிமிடம் நன்கு உலர்ந்த பின்பு ஈரத்துணியால் துடைத்து விடுங்கள். இதுபோல முதல் ஒரு வாரம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தினமும் செய்து வாருங்கள். அடுத்த வாரம், வாரம் இரண்டு முறை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெறும் 2 நிமிடத்தில், 2 ரூபாய் செலவில் பாத வெடிப்பை சரி செய்ய இதைவிட வேற ஐடியா இந்த உலகத்திலேயே இருக்க முடியாது.

மூன்றாவது வாரத்தில் இருந்து வாரம் ஒருமுறை செய்ய ஆரம்பித்தாலே உங்களுடைய கழுத்தின் நிறமும், முகமும் ஒரே மாதிரியான நிறத்திற்கு வந்துவிடும். அதன் பிறகு நீங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதி இரண்டு பகுதியிலும், வாரம் ஒருமுறை இந்த பேக்கை தடவி வந்தால் முகம், கழுத்து மாசு, மரு இல்லாமல் வெள்ளைக்காரங்க போல வெள்ளை வெளேர் என பளிச்சென ஜொலிக்கும். நீங்களும் இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க பேரழகி ஆகலாம்.

- Advertisement -