இன்றைய காலத்தில் பணத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே போல் தான் ஒருவருடைய கல்வி அறிவிற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் இருக்கிறது. கல்வி அறிவை பொருத்து தான் பலரும் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்கிறார்கள். கல்வி அறிவை பெறவேண்டும் என்பது இன்றைய காலத்தில் மட்டுமல்ல நம்முடைய முன்னோர்கள் காலத்திலேயே மிகவும் முக்கியமான அத்தியாவசிய ஒன்றாகவே திகழ்ந்திருக்கிறது. இருப்பினும் இன்றைய காலத்தில் நாம் நினைத்த வேலையில் சேர்வதற்கும் நம் நினைத்த தொழிலை செய்வதற்கும் நமக்கு போதுமான அளவு கல்வி அறிவு இருந்தால் தான் அதை சிறப்பான முறையில் செய்து வாழ்க்கையில் வெற்றியை பெற முடியும். அப்படிப்பட்ட கல்வியறிவை பெறுவதற்கு இருக்கக்கூடிய தடைகள் எதுவாக இருந்தாலும் அந்த தடைகளை நீக்குவதற்கு வீட்டில் ஏற்ற வேண்டிய பஞ்சகவ்ய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கல்வி தடையை நீக்கும் தீபம்
எந்த ஒரு தெய்வ வழிபாட்டிற்கும் தீபம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்று நம் அனைவருக்கும் தெரியும். அனைத்து தெய்வங்களும் ஒரு சேர குடியிருக்க கூடிய கோமாதாவின் சாணத்திலிருந்து தயாரிக்க கூடிய தீப விளக்காக தான் பஞ்சகவ்ய விளக்கு திகழ்கிறது. பஞ்சகவ்ய விளக்கில் யார் ஒருவர் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் யாகம் செய்த பலனை பெறுகிறார்கள் என்று நம்முடைய புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட பஞ்சகவ்ய விளக்கை எந்த முறையில் ஏற்றினால் கல்வி தடைகள் நீங்கி ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதியின் அருளைப் பெற முடியும் என்று இப்பொழுது பார்ப்போம்.
வசதி மிக்கவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லது ஏதாவது ஒரு செயல் நடைபெற வேண்டும் என்றால் உடனே யாகம் வளர்த்து ஹோமம் செய்து அதற்குரிய பலனை பெறுவார்கள். சாதாரணமான குடும்பத்தில் இருக்கக்கூடியவர்களோ அல்லது பின்தங்கிய குடும்பத்தில் இருக்கக்கூடியவர்களோ அப்படிப்பட்ட வசதி மிக்க யாகங்களையோ அல்லது ஹோமங்களையோ செய்ய இயலாது. அப்படிப்பட்டவர்களுக்காகவே இறைவன் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் பஞ்சகவ்ய தீபம். எந்த ஒரு வீட்டில் பஞ்சகவ்ய தீபம் எறிகிறதோ அந்த வீட்டில் யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கல்வியில் இருக்கக்கூடிய தடைகள் எதுவாக இருந்தாலும் அந்த தடைகள் நீக்குவதற்கு நாம் கல்வி தடை நீக்கும் யாகத்தை செய்வதற்கு பதிலாக இந்த பஞ்சகவ்ய தீப வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வளர்பிறையில் வரக்கூடிய புதன் அல்லது வியாழக்கிழமை இந்த தீபத்தை ஏற்ற ஆரம்பிக்க வேண்டும். காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபங்களோடு சேர்த்து இந்த தீபத்தையும் நாம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு கண்ணாடி கிண்ணம் வேண்டும். அந்த கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர், சிறிது கற்கண்டு, சிறிது நாட்டு சக்கரை, சிறிதளவு பன்னீர் ஊற்றி அந்த தண்ணீருக்குள் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து அந்தக் கிண்ணத்தில் பஞ்சகவ்ய விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை பார்த்தவாறு சரஸ்வதியின் மந்திரத்தையோ அல்லது லட்சுமி ஹயக்ரீவரின் மந்திரத்தையோ முழு மனதோடு கூறி கல்வித்தடை முற்றிலும் நீங்க வேண்டும் என்று வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும். பஞ்சகவ்ய விளக்கு முழுமையாக எரிந்து சாம்பல் ஆனாலும் சரி, முழுமையாக எரியாமல் நின்று விட்டாலும் சரி ஒவ்வொரு நாளும் தீபம் எரிந்து முடித்த அதை ஒரு கருப்பு நிற கவரில் சேகரித்து வைக்க வேண்டும். கண்ணாடி கிண்ணத்தில் இருக்கக்கூடிய தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். 48 நாட்கள் சேகரித்து வைத்த அந்த பஞ்சகவ்ய விளக்கின் சாம்பலை 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு கடற்கரைக்கு சென்று யாருக்கு கல்வி தடை இருக்கிறதோ அவர்கள் கைகளினால் அந்த சாம்பலை எடுத்து கடலில் கரைத்து விட்டு மூன்று முறை கடலில் முங்கி எழுந்து வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு இருக்க கூடிய கல்வி தடைகள் அனைத்தும் விலகும்.
இதையும் படிக்கலாமே: ஆவணி மாத மூன்றாம் பிறை வழிபாடு
பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து யாகம் வளர்ப்பதை விட இந்த எளிமையான பஞ்சகவ்ய தீபத்தை ஏற்றி யாகம் வளர்த்த பலனை பெற்று கல்வி தடையை முற்றிலும் விலக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.