கல்யாண பந்தியில் வைக்கப்படும் சுவையான உருளைக்கிழங்கு மசாலாவை ரகசியம் தெரிந்து கொண்டு, நீங்களும் ஒருமுறை இதனை ட்ரை செய்து பாருங்கள்.

potato
- Advertisement -

கல்யாணம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது கல்யாண பந்தியில் போடப்படும் சுவை மிகுந்த உணவு வகைகள் தான். ஒரு சிலர் இந்த உணவு வகைகளை சுவைப்பதற்காகவே திருமணத்திற்கு செல்கின்றனர். அந்த அளவிற்கு திருமணத்தில் செய்யப்படும் உணவுகள் தனி விதமான சுவையில் இருக்கின்றன. இவற்றில் சிறிய சிறிய ரகசிய குறிப்புகளை கையாள்வதன் மூலம் அவை தனிப்பட்ட சுவையில் இருக்கின்றன. இவ்வாறான சின்னச்சின்ன ரகசிய குறிப்புகளை தெரிந்து கொண்டால் நீங்களும் உங்கள் வீடுகளில் இந்த கல்யாண பந்தியில் வைக்கப்படும் அதே சுவையில் இருக்கும் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவை வீட்டிலேயே செய்ய முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

food

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3, பச்சை பட்டாணி – 150 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், சோம்பு – ஒன்றரை ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 2, கடுகு – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – அரை ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அடுத்ததாக பச்சைபட்டாணி, உருளை கிழங்கை சுத்தமாக கழுவிக் கொண்டு, குக்கரில் சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து இவற்றை ஆற வைக்க வேண்டும்.

potato-fry

அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 2 சில்லு தேங்காயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சோம்பு மற்றும் பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, அடுத்ததாக தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து வதக்கிவிட்டு, அவற்றுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இவற்றை நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

potato-gravy2

பிறகு மூடியை திறந்து உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இவை சிறிது நேரம் நன்றாக கொதித்து தண்ணீர் ஓரளவுக்கு வற்றியதும் கொத்தமல்லி தழையை தூவி, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா தயாராகிவிட்டது.

- Advertisement -