கல்யாண வீட்டு சுவையான ரசத்தை உங்கள் வீட்டிலும் செய்ய ஆசையா? அப்பொழுது உடனே இப்படி செய்து பாருங்கள்

rasam
- Advertisement -

என்னதான் வீட்டில் சாம்பார், ரசம், காரக்குழம்பு இவற்றை செய்து கொடுத்தாலும் ஹோட்டலிலும் கல்யாணத்திலும் சாப்பிடும் சுவை தனியாகத்தான் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இங்கு சென்று சாப்பிடும் சுவையை விரும்பித்தான் செல்கின்றனர். வீட்டில் ஒரு கைப்பிடி சாப்பிட்டாலும் வெளியில் சென்றால் அதிகமாக சாப்பிடுவார்கள். அதிலும் கல்யாணத்தில் போடப்படும் அனைத்து விதமான உணவு வகைகளை மிகவும் சுவையாகவே இருக்கும். அதில் எப்பொழுதும் அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது ரசம் தான். இந்த ரசம் மட்டும் வீட்டில் செய்வதைவிட தனிப்பட்ட சுவையில் இருக்கும். அவ்வாறு சுவையான இந்த கல்யாண ரசத்தை எப்படி வீட்டிலும் செய்ய முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
புளி – நெல்லிக்காய் அளவு, தக்காளி – 3, தனியாத்தூள் – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒரு கப், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பூண்டு – 10 பல், கடுகு – அரை ஸ்பூன், தனியா – 6 ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 10, எண்ணெய் – 2 ஸ்பூன், மிளகு – 2 ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து, நன்றாக கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதன்பின் பூண்டை உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும். பிறகு ரசம் வைப்பதற்கு முதலில் ரசப்பொடி அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, அதில் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு மற்றும் 6 ஸ்பூன் கொத்தமல்லி விதை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இவற்றுடன் 10 வர மிளகாய், சீரகம் மற்றும் மிளகு சேர்த்து இவற்றையும் நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு இதனை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் கருவேப்பிலை மற்றும் தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தக்காளி வேகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரையும் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு கப் பருப்பு தண்ணீர் ஊற்றி சூடேறியதும், அதனுடன் அரைத்து வைத்துள்ள ரச பொடியை 2 ஸ்பூன் அளவு சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவேண்டும். இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை சேர்த்து லேசாக கொதி வர ஆரம்பிக்கும்போது அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கல்யாண ரசம் தயாராகிவிட்டது.

- Advertisement -