பிரச்சனைகள் உங்களை தொடர்ந்து கொண்டே இருந்தால், அதற்கு காரணம், நீங்கள் ஏற்றும் இந்த தீபமாக கூட இருக்கலாம். கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் பெருக இப்படித் தான் தீபம் ஏற்ற வேண்டும்.

deepam
- Advertisement -

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்றாலே அது காமாட்சியம்மன் விளக்கை தான் குறிக்கும். விளக்கில் பலவகை உண்டு குத்துவிளக்கு, அகல் விளக்கு, ஆத்ம விளக்கு, என்று எத்தனை வகைகள் இருந்தாலும் காமாட்சி அம்மன் விளக்கு தான் அனைத்திலும் விட பிரதானமாக ஏற்றப் படுகிறது. நம் முன்னோர்களும் வழிபாட்டில் முக்கியத்துவம் கொடுத்து ஏற்றிய விளக்கும் இந்த காமாட்சியம்மன் விளக்கு தான். இந்த விளக்கை ஏற்றும் போது செய்யக்கூடாத சில தவறுகளை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நம் வீட்டில் ஏற்றப்படும் இந்த காமாட்சி அம்மன் விளங்கானது எப்போதுமே நல்ல பிரகாசமாக இருக்க வேண்டும். அதில் வைத்த மஞ்சள் குங்குமம் மங்கி இருக்கக் கூடாது. அதே நேரத்தில் அதில் எண்ணெய் படிந்து கறுத்தும் இருக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கை பொருத்த வரையில் எப்போதும் நல்ல பளபளப்புடன் தங்கம் போல ஜொலிக்க வேண்டும். அப்படி தான் நாம் இந்த விளக்கை பராமரிக்க வேண்டும்.

- Advertisement -

அதே போல் காமாட்சி அம்மன் விளக்கை சாதாரணமாக வைத்து ஏற்றக் கூடாது. விளக்கின் அளவை விட கொஞ்சம் பெரியதாக ஒரு தட்டு வைத்து ஏற்ற வேண்டும். அந்தத் தட்டு சில்வர் தட்டாக இருக்கக் கூடாது. சிலர் அதில் பச்சரிசி, மஞ்சள் கலந்து வைக்கும் ஏற்றுவார்கள் அப்படி ஏற்றினாலும் விசேஷம் தான். இரண்டுமே மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருள். இப்படி ஏற்றும் போதும் வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கும். அதே போல் காமாட்சி அம்மன் விளக்கில் பூ வைக்காமல் ஏற்றக் கூடாது. ஒரு கொத்து பூவாது விளக்கின் மீது வைத்து தான் தீபம் ஏற்ற வேண்டும்.

விளக்கில் ஒரு நாள் ஏற்றிய திரியை அடுத்த நாள் போடக் கூடாது. அடுத்த நாள் ஏற்றும் போது புதிய திரியை போட்டு தான் ஏற்ற வேண்டும் .அதே போல் நல்லெண்ணெய், பசுநெய் ஊற்றி பஞ்சித் திரி போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும். இந்த திரியானது எரிந்து விடவே கூடாது. இது குடும்பத்திற்கு எப்போதும் தீராத கஷ்டத்தை கொடுக்கும்.

- Advertisement -

கஷ்டம் தீர காமாட்சி விளக்கு ஏற்றும் முறை
அதே போல் இந்த காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் போது விளக்கை சுவாமி படங்களுக்கு முன் வைத்து ஏற்றவோம். அப்போது விளக்கின் ஒளியானது பின்புறம் இருக்கும் சுவாமி படங்களின் மீது பட்டு ஒளி ஆனது தடுக்கும். இப்படி தீபம் ஏற்றவே கூடாது நாம் ஏற்றும் தீபத்தின் ஒளியானது கடவுள்களில் மீது நேரடியாக பட வேண்டும் காமாட்சி அம்மன் மீது ஒளிப்பட்டால் மட்டும் பத்தாது. வீட்டில் இருக்கும் மற்ற தெய்வங்களை வணங்க தான் இந்த காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுகிறோம். அப்படி இருக்கும் போது அந்த படங்களின் மீது இந்த விளக்கின் நிழலானது படங்களின் மீது படியும் போது அங்கு இருள் அடைந்து இருக்கும். அப்படி தீபம் ஏற்றினால் வீட்டில் தெய்வ சக்தி, லட்சுமி கடாட்சம் எல்லாம் குறையும்.

காமாட்சி அம்மன் விளக்கு கிழக்கு முகமாக மட்டும் தான் ஏற்ற வேண்டும் என்று இல்லை. வடக்கு முகமாகவும் எற்றலாம். அப்படி வைக்கும் போது உங்கள் படங்களின் மீது இந்த நிழல் படாமல் இருக்குமானால் அப்படி வைத்து ஏற்றுக் கொள்ளுங்கள் . அப்படி ஏற்ற வாய்ப்பு இல்லை என்றால் விளக்கின் நிழல் படங்களில் மீது படாமல் எப்படி ஏற்ற முடியுமோ அது போல ஏற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: தீர்க்கவே முடியாது என்று திணறிய கடனைக் கூட சுலபமாக தீர்க்க, இந்த மார்கழி அமாவாசையில், இந்த நேரத்தை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவற விட்டால் கடன் தீர இது போன்ற நாள் கிடைக்காது.

வீட்டில் ஏற்றப் படும் இந்த தீபமானது எல்லா இடத்திலும் ஒளியை தந்து நம் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்க தான்.அப்படியான ஒளி தெய்வத்தின் மீது படாமல் இருந்தால் வீட்டில் நிச்சயம் கஷ்டங்கள் தொடரும். இனி வீட்டில் விளக்கை ஏற்றும் போது தெய்வத்தின் மீது நிழல் படாமல்,ஒளி படும் படி ஏற்றி தெய்வ கடாட்சமும், லட்சுமி கடாட்சத்தையும் பெற்று நல்ல வளமான வாழ்க்கை வாழுங்கள்.

- Advertisement -