பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை இப்படி வைத்து ஏற்றினால் குடும்பத்தில் சந்தோஷம் பல மடங்காக பெருகும்.

vilakku
- Advertisement -

எத்தனையோ வடிவத்தில் எத்தனையோ விளக்குகள் வடிவமைக்கப்பட்டு கடைகளில் விற்கின்றது. ஆனால் ஒரு வீடு என்று இருந்தால், அந்த வீட்டு பூஜை அறையில் கட்டாயமாக இந்த காமாட்சி அம்மன் விளக்கு இருக்க வேண்டும். இப்போது காமாட்சியம்மன் விளக்கில், கஜலட்சுமி திருவுருவப்படமும் பொறிக்கப்பட்டு விற்கப்படுகிறது. உங்கள் வீட்டில் எந்த விளக்கு இருந்தாலும் சரி, அந்த காமாட்சி அம்மன் விளக்கை, கஜலட்சுமி விளக்கை முறைப்படி பூஜை அறையில் எப்படி அமர வைத்து, எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

காமாட்சி அம்மன் விளக்கை ஒரு வீட்டில் குல தெய்வமாக போற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஏதோ பூஜை அறைக்கு சென்றோம் தீபம் ஏற்றினோம் என்று இருக்கக் கூடாது. காமாட்சி அம்மனுக்கு என்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு மனப்பலகை அல்லது சிறிய முக்காலி கட்டாயமாக இருக்க வேண்டும். அந்த முக்காலுக்கு மேலே தான் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் ஒரு சிறிய தட்டிலாவது காமாட்சியம்மனை அமர வைக்க வேண்டும். இது காமாட்சி அம்மனுக்கு சிம்மாசனம் அமைப்பது போல. காமாட்சியம்மன் விளக்கிற்கு அடியில், பச்சரிசியால் செய்த அர்ச்சதை கட்டாயம் இருக்க வேண்டும். அதாவது பச்சரிசியில் ஒரு சொட்டு நெய் விட்டு, மஞ்சள் தூளை தூவி கலந்து விட்டால் அட்சதை தயார்.

காமாட்சி அம்மன் விளக்குக்கு அடியில் இந்த அட்சதையை போட்டு வைப்பது வீட்டில் தன தானியத்தில் செழிப்பை உண்டாக்கும். வீட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சம் என்பது ஏற்படாது. காமாட்சியம்மன் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றி தான் ஏற்ற வேண்டும். தேவைப்பட்டால் நல்ல எண்ணெயில் கொஞ்சம் நெய் கலந்தும் ஏற்றலாம். தவறு கிடையாது. மற்றபடி வேறு எந்த எண்ணெயையும் காமாட்சி அம்மன் விளக்கில் ஊற்றி விளக்கு ஏற்ற கூடாது.

- Advertisement -

இதே போல காமாட்சியம்மன் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றிவிட்டு அதில் 1 ரூபாய் நாணயமோ அல்லது 5 ரூபாய் நாணயமோ போட்டு அதன் பின்பு திரி போட்டு தீபம் ஏற்றுவது வீட்டிற்கு செல்வ கடாட்சத்தை கொடுக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் தீபம் ஏற்றும் போது குறிப்பாக காமாட்சி அம்மன் தீபம் ஏற்றும் போது, உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு தீபம் ஏற்றுங்கள். இந்த பிரகாசமான ஒளி போல, உங்கள் குடும்பமும் எப்போதும் பிரகாசமாக சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தீபம் ஏற்றுவது குடும்பத்திற்கு மிக மிக நல்லது.

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு காமாட்சியம்மன் விளக்கை சீதனமாக கொடுக்கலாம். அதாவது புதிய விளக்கை வாங்கி கொடுக்க வேண்டும். அந்த விளக்கு பித்தளையில் இருக்கலாம். வெள்ளியில் இருக்கலாம். பெரும்பாலும் சீதனமாக குத்து விளக்கை தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் காமாட்சியம்மன் விளக்கை ஒரு வீட்டில் உள்ள பிறந்த பெண்ணுக்கு சீதனமாக கொடுத்து அனுப்பினால், அது பிறந்த வீட்டிற்கும் சுபிட்சத்தை தரும். புகுந்த வீட்டிற்கும் சுபிட்சத்தை தரும். ஆனால் நம் வீட்டில் எரிந்த விளக்கை அடுத்தவர்களுக்கு நாம் எப்போதும் கொடுக்கவே கூடாது. அது பெண்ணாக இருந்தாலும் சரி, நம் வீட்டில் எரிந்த விளக்கை தானமாக அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

அந்த வீட்டு வாரிசான ஆண் வாரிசுகள் தான் நம் வழக்கப்படி அந்த விளக்கை எடுத்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இது ஆண்டாண்டு காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வரக்கூடிய வழக்கமும் கூட. அதை நீங்கள் மாற்ற வேண்டாம். வீட்டில் ஆண் வாரிசு இல்லை, பெண் வாரிசு தான் உள்ளார்கள் எனும் பட்சத்தில் அந்த வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கை, அந்தப் பெண் எடுத்துக் கொள்வதன் மூலம் எந்த தவறும் கிடையாது. நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த சில பழக்க வழக்க முறைகளை நாம் அப்படியே ஏற்றுக் கொள்வது நம் குடும்பத்திற்கு நல்லது என்ற கருத்துடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -