கம்புல இப்படி அடை சுட்டு கொடுத்தா குட்டிஸ் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

kambhu adai recipe
- Advertisement -

தானிய வகைகளிலே கம்பும் சத்து நிறைந்த ஒன்று தான் ஆனால் இதை பெரும்பாலும் யாரும் அதிகம் உண்பதில்லை. அதிலும் குழந்தைகள் இந்த கம்பில் எதை செய்து கொடுத்தாலும் தொடக் கூட மாட்டார்கள். ஆகையால் கம்புவை வைத்து அதில் சிறிது காய்கறிகளை சேர்த்து ஒரு அருமையான அடை தோசையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

கம்பு – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் மீடியம் சைஸ் – 1 கேரட் -1
எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
கருவேப்பிலை -1 கொத்து
முருங்கைக்கீரை -1 கைப்பிடி
உப்பு -1/4 டீஸ்பூன்

- Advertisement -

செய்முறை

முதலில் கம்பை நன்றாக சுத்தம் செய்து மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு இதை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து விட்டு இதில் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி லேசான கொரகொரப்புடன் அடை மாவு பதத்திற்கு அரைத்து பவுலில் மாற்றி ஊற்றி வைத்து விடுங்கள்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக சிவந்து வந்தவுடன் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கேரட் முருங்கை கீரை, கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து வதக்கி அடை மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்துப் பிறகு உப்பையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடான பிறகு அடை தோசை போல கொஞ்சம் மெத்தமாக ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அடை தோசையை சுற்றி நெய் அல்லது எண்ணெய் உங்களுக்கு விருப்பமானவற்றை ஊற்றி கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: லாலா கடைமொறு மொறு கட்டிப் பக்கோடா செய்வது எப்படி?

இந்த கம்பில் வாரம் ஒரு முறையாவது இது போல அடை தோசை செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள். அது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும். அது மட்டுமின்றி இதை பெரியவர்களும் தாராளமாக உண்ணலாம். இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -