லாலா கடைமொறு மொறு கட்டிப் பக்கோடா செய்வது எப்படி?

pakoda
- Advertisement -

திருநெல்வேலி லாலா கடை பக்கோடா என்றால் மிக மிக பிரபல்யம். அப்படிப்பட்ட பகோடாவின் சுவை வேறு எந்த கடைகளிலும் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அதேபோல பேக்கரி ஸ்டைலில், மொறுமொறுப்பான கட்டிப் பக்கோடாவை நம்முடைய வீட்டில் செய்வது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.

துல்லியமான அளவுகளுடன் ஒரு முறை இப்படி மாவு பிசைந்து பகோடா சுட்டுப் பாருங்கள். இனிமேல் நீங்கள் பக்கோடா வாங்க பேக்கரி பக்கம் போகவே மாட்டீங்க. வீட்டிலேயே மொறு மொறுப்பா சூப்பரா பகோடா சுட்டு எடுத்துடுவீங்க. வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 300 கிராம்
இஞ்சி – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 50 கிராம்
பூண்டு – 50 கிராம்
சீரகம் – 2 ஸ்பூன்
சோம்பு – 2 ஸ்பூன்
சோடா உப்பு – 1/4 ஸ்பூன்
உப்பு – 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
வெதுவெதுப்பான எண்ணெய் – 200 ml
கருவேப்பிலை – 3 கொத்து
தண்ணீர் – 200 ml
இந்த பகோடாவை பொரித்து எடுப்பதற்கு – தேவையான எண்ணெய்.

செய்முறை

சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் சீவி உரித்து வட்ட வட்டமாக நறுக்கி தனியாக வைத்து விடுங்கள். மிக்ஸி ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். முடிந்தால் சின்ன உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக நசுக்கியும் போடலாம். அது நம்முடைய விருப்பம். கருவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை, மிளகாய் பூண்டு கொரகொரப்பான விழுது, சீரகம், சோம்பு, சோடா உப்பு, பெருங்காயத்தூள், சுவைக்கு ஏற்ப உப்பு, எல்லா பொருட்களையும் போட்டு உங்கள் கையைக் கொண்டு முதலில் நன்றாக கலந்து விடுங்கள். அடுத்து வெதுவெதுப்பாக இருக்கும் எண்ணெயை ஊற்றி மீண்டும் கலக்க வேண்டும். பிறகு இதில் தண்ணீர் 200 ml ஊற்றி கலந்துக்கோங்க.

இறுதியாக எடுத்து வைத்திருக்கும் சுத்தமான கடலை மாவை இதில் போட்டு கையை போட்டு பிசைய கூடாது. அப்படியே வட்ட வடிவில் கடலைமாவை கலந்து விட வேண்டும். கடலை மாவு எண்ணெய் தண்ணீர் மற்ற பொருட்கள் எல்லாம் சேர்ந்து சுருண்டு அப்படியே கட்டிப்பிடிக்க தொடங்கும். கையை வைத்து அழுத்தம் கொடுத்து மாவை பிசைந்து விடவே கூடாது. லேசாக பிசைந்து எடுத்தால் சூப்பரான பக்கோடா மாவு தயாராக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இப்போது இதை சுட்டு எடுக்க வேண்டியது தான். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை நன்றாக சூடு செய்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு இந்த பக்கோடா மாவை கையில் எடுத்து, அப்படியே எண்ணெயில் உதிர்த்துப் போடவும். ரொம்பவும் உதிர்த்து போடாதீங்க. இது கட்டி பகோடா.

கொஞ்சம் கட்டி கட்டியாக தான் இருக்க வேண்டும். எண்ணெயில் பகோடாவை போட்டவுடன் எந்த கரண்டியை வைத்து கலக்கக்கூடாது. பகோடா ஓரளவுக்கு வெந்து வந்தவுடன் கரண்டியை வைத்து திருப்பி போடுங்கள். அப்போதாவது தான் பகோடா உடையாமல் சூப்பராக கிடைக்கும்.

பகோடா வெந்து சிடசிடப்பு தன்மை ஓரளவுக்கு அடங்கி வந்தவுடன், பகோடாவை எண்ணெயிலிருந்து வடித்து எடுத்து விடுங்கள். இந்த பகோடா சூடா இருக்கும்போது கொஞ்சம் நமுத்து போனது போலத்தான் இருக்கும். ஆறின பிறகு நன்றாக மொரு மொறுப்பாக மாறிவிடும். சுவையான பேக்கரி ஸ்டைல் பக்கோடா இப்படித்தான் வீட்டில் செய்ய வேண்டும். உங்களுக்கு ரெசிபி பிடிச்சிருந்தா ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: இதில் பெரிய வெங்காயம் சேர்த்தால் பகோடா சுட்டு எடுக்கும் போது அந்த வெங்காயம் மட்டும் சீக்கிரம் பொன்னிறமாக சிவந்து வந்துவிடும். பக்கோடா மாவு வேகாது. அது மட்டுமல்லாமல் பெரிய வெங்காயம் நீர்த்து விடும். அதனால் பகோடா மாவு நீர்த்துப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. சின்ன வெங்காயம் சேர்த்து தான் இந்த பகோடா செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு சூப்பரான சைடு டிஷ்

நீங்கள் இப்போதுதான் புதுசாக சமைக்க பகழகுகிறீர்கள் என்றால், பக்கோடாவில் 200ml தண்ணீருக்கு பதில் 150ml தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இறுதியாக தேவைப்பட்டால் மீதம் கொஞ்சம் தண்ணீரை தெளித்து மாவு பிசைந்து கொள்ளலாம். ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -