எப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண் திருஷ்டியை நீக்க, இந்த மந்திரத்தை 1 முறை சொன்னாலே போதும்.

sad-lemon

நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் சமயத்தில், நமக்கு இடையூறாக, தடைக்கல்லாக வந்து நிற்பது, கண் திருஷ்டி தான். நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து, விபத்து வந்தாலும் தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கண் திருஷ்டியில் இருந்தும், ஊர்மக்கள் கண்களில் இருந்தும், உறவினர்களின் கண் திருஷ்டியில் இருந்தும் தப்பிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. இந்த கண்திருஷ்டியை போக்குவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், அதில் ஒரு சிறப்பான வழியை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kan-thirusti

கண்திருஷ்டியை கழிக்க எந்த பொருளை வைத்து, எந்த மந்திரத்தை சொல்லி பரிகாரம் செய்யலாம்? இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை மாலை 6 மேல் மணிக்கு செய்யலாம். அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் செய்யலாம். அல்லது அமாவாசை தினத்தில் இரவு 9 மணிக்கு மேல் செய்யலாம்.

முதலில் உங்கள் குடும்பத்தில் யாருக்கு திருஷ்டி அதிகமாக இருக்கின்றதோ, அந்த குறிப்பிட்ட நபரை, கிழக்கு பார்த்தது போல், அமர வைத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு கைப்பிடி அளவு உப்பு எடுத்து, அந்த நபருக்கு வலதுபக்கம் மூன்று முறை, இடது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி தண்ணீரில் போட்டு விடுங்கள்.

salt1

இரண்டாவதாக நம் வீட்டில் இருக்கும், தாளிக்க பயன்படுத்தும் கடுகை சிறிதளவு, அந்த கடுகை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் போதும். அதை உப்பை சுற்றுயது போலவே, வலது பக்கம் மூன்று முறை, இடது பக்கம் மூன்று முறை ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி ஒரு கொட்டாங்குச்சியை எரித்து அந்த நெருப்பில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக, அதாவது மூன்றாவதாக, இறுதியாக ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து, அதன் மேல் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி, இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி, கற்பூரத்தை கீழே தள்ளிவிட்டு முழுமையாக எரிய விட்டு விடுங்கள்.

உங்கள் கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை முடிந்தால், கைகளால் நசுக்கி இரண்டு துண்டாக ஆக்கி விடுங்கள். முடியாதவர்கள் கத்தியால் இரண்டு துண்டாக ஆக்கி, அதை வீதியில் போட்டு விட வேண்டும். இந்த எலுமிச்சை பழத்தை சுற்றும்போது மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். எலுமிச்சை பழ திருஷ்டியை சுற்றும்போது, நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ!

மஞ்சள் வர்ண புளித்த மாரி!
ரத்த வீர ராசா கன்னி,
மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா!வா!

lemon1

அவ்வளவுதான். உங்களை பிடித்த கண்திருஷ்டியுனது, ஒரே நாளிலேயே ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு மந்திரத்தை உச்சரித்து, நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து, பயனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எந்த நட்சத்திரத்திற்கு எந்த திசையில் நிலைவாசல் அமைந்திருந்தால் சுகபோக வாழ்வு கிட்டியிருக்கும்? வேறு திசையில் நிலைவாசல் இருந்தால் அதை எப்படி அதிர்ஷ்டமாக மாற்றுவது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan Thirusti Lemon. Kan Thirusti Neenga in Tamil. Kan thirusti pariharam in Tamil. Kan thirusti remedies Tamil