கண் திருசுடியில் இருந்து விடுபட உதவும் கண் திரிஷ்டி பரிகாரம்

kan drishti pariharam in tamil
- Advertisement -

பொதுவாக ஒருவர் வாழ்வில் வறிய நிலையில் இருந்தால், அவர்களைக் கண்டு இந்த உலகத்தார் ஏளனம் செய்வார்கள். ஆனால் அதே நபர் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்தால், அவரை கண்டு பலரும் பொறாமையும், வயிற்று எரிச்சலும் கொள்வார்கள். இத்தகைய கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடமிருந்து வெளிப்படும் தீய ஆற்றல்களை கொண்ட பார்வை தான் “கண் திருஷ்டி” எனப்படுகிறது. இந்த கண் திருஷ்டி ஏற்பட்டவர்கள் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய கண் திருஷ்டி பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கண் திரிஷ்டி பரிகாரம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், உங்கள் வீட்டின் நிலைவாயில் கதவுக்கு மேலாக அசோக இலைகளை ஒரு நூலில் தோரணமாக கட்டி தொங்க விட வேண்டும். அசோக மர இலைகளுக்கு கண் திருஷ்டிகளை போக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. அதே போன்று மயில் இறகு ஒன்றை உங்கள் நிலை வாயில் கதவுக்கு மேலாக வைத்து விடுவதாலும் எத்தகைய எதிரிகளின் கண் திருஷ்டி தோஷங்களும் உங்கள் வீட்டிற்குள் நுழையாது தடுத்துவிடும். மஞ்சள் கிழங்கிற்கு தீயவற்றை அழிக்கின்ற ஆற்றல் அதிகம் உண்டு. எனவே சில மஞ்சள் கிழங்குகளை ஒரு நூலில் கோர்த்து, அதை தலை வாயிலின் மேல் இருக்கின்ற ஆணியில் மாட்டி வைப்பதாலும் கண் திருஷ்டி தோஷங்கள் அந்த வீட்டில் இருப்பவர்களை பாதிக்காமல் காக்கும்.

- Advertisement -

காய் பதத்தில் இருக்கின்ற 1 எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சனிக்கிழமை தினத்தன்று உங்கள் வீடு, அலுவலகம், தொழிற்கூடம் ஆகிய இடங்களில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகளில் இருக்கின்ற சுவர்களில் அந்த எலுமிச்சையை தொட்டு எடுத்து கொள்ள வேண்டும். பிறகு வெளியே சென்று அந்த எலுமிச்ச பழத்தை நான்கு துண்டுகளாக அறுத்து, நான்கு திசைகளில் வீசி விட வேண்டும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் மட்டும்தான் செய்ய வேண்டும்.

தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் சக போட்டியாளர்களின் திருஷ்டி தோஷங்கள் தங்களை பாதிக்க கூடாது என கருதினால், ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான நீரை ஊற்றி, அதில் கரும்புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு, உங்கள் கடை, தொழில் கூடங்களில் இருக்கின்ற சுவாமி படங்கள் முன்பாகவோ அல்லது கல்லாப்பெட்டி இருக்கின்ற மேஜையின் மீதாகவோ வைக்க வேண்டும்.

- Advertisement -

எலுமிச்சம் பழம் அழுகும் நிலையில் இருந்தால் அதை தூக்கிப்போட்டு புதிய எலுமிச்சை பழத்தை அந்த நீரில் போட்டு வைக்க வேண்டும். அதே போன்று தினந்தோறும் கண்ணாடி டம்ளரில் இருக்கின்ற பழைய தண்ணீரை ஏதேனும் செடிக்கு ஊற்றி விட்டு, புதிய தண்ணீரை ஊற்றி, அதில் எலுமிச்சை பழத்தை போட்டு வைக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் கண் திருஷ்டியால் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக கருதினால் தினந்தோறும் காலையில் சிறிதளவு “கங்காஜலம்” எனப்படும் கங்கை நீர் தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து வந்தால் திருஷ்டி தோஷங்கள் அனைத்தும் நீங்கும். புதன்கிழமைகளில் 7 விதமான தானியங்களை கோயில்களுக்கு தானம் செய்யலாம் அல்லது பறவைகள் உண்பதற்கு அந்த 7 வகையான தானியங்களை இரையாகக் கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர பரிகாரம்

தங்களுக்கு கண் திருஷ்டிகள் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதாக கருதுகின்றவர்கள் வீட்டில் ராகு பகவான் யந்த்ரம் ஒன்றை பூஜையறையில் ஸ்தாபித்து அதற்குரிய பூஜைகளை முறைப்படி செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். 9 முக ருத்திராட்சத்தை கையிலோ அல்லது கழுத்திலோ அணிந்து கொள்வதாலும் திருஷ்டி தோஷங்கள் ஏதும் அந்த ருத்ராட்சம் அணிந்த நபரை அணுகாமல் விலகி விடும்.

- Advertisement -