கண் சுருக்கம் நீங்க டிப்ஸ்

eye wrinkle
- Advertisement -

ஒருவருடன் நாம் கலந்துரையாடும் பொழுது நாம் அவர்களின் கண்களை பார்த்து தான் பேசுவோம். அந்த கண்களை பார்த்து பேசும் பொழுது தான் உண்மையான கலந்துரையாடல் என்பது நிகழும் என்று கூறுவார்கள். அப்படி கண்களை பார்த்து பேசும் பொழுது அந்த கண்கள் பிரகாசமாக இருக்க வேண்டும் சோர்வாக இருக்கக் கூடாது. பொதுவாக அனைவரும் கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சனை என்று கருதுவது கண் கருவளையம் மட்டுமே.

ஆனால் கண்களில் கருவளையம், சுருக்கம், கண்களின் கீழ் பை போன்ற ஒரு தோற்றம், குட்டி குட்டி கொழுப்பு கட்டிகள், சில நபர்களுக்கு புருவம் கண்கள் சற்று கீழே இறங்கி இருக்கும் இப்படி பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் ஏற்பட்டாலே அவர்களின் முகத்தோற்றம் முதுமை அடைந்தது போல் தோற்றமளிக்கும். இந்த பிரச்சினைகளில் கண் சுருக்கத்தை நீக்குவதற்கு என்னென்ன பயன்படுத்த வேண்டும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கண் சுருக்கம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக வயது முதிர்ச்சி சொல்லப்படுகிறது. இருப்பினும் கண்களுக்கு கீழே கொலாஜின் மிகவும் குறைந்த அளவே உற்பத்தியாகும் என்பதால் விரைவிலேயே கண்களில் சுருக்கம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இதை சரி செய்வதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நாம் ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.

டிப்: 1

- Advertisement -

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு சிட்டிகை மஞ்சள் இவை இரண்டையும் நன்றாக கலந்து கண்களை சுற்றி தடவி 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம் செய்ய கண்களில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி கண் இளமையான தோற்றத்தை தரும்.

டிப்: 2

- Advertisement -

ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு நம் முகம் கண்களில் தினமும் தடவி வர முகம் இளமையான தோற்றத்தை பெரும். இந்த ஆலிவ் எண்ணெயுடன் சிறு துளிகள் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து தடவும் பொழுது இதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.

டிப்: 3

ஏழு திராட்சை பழங்களை எடுத்து அதை நன்றாக மசித்துக்கொண்டு பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கெட்டி தயிரை சேர்த்து நன்றாக கலந்து தடவுவதன் மூலமும் கண்களில் இருக்கக்கூடிய சுருக்கங்களும் முகச்சுருக்கங்களும் நீங்கி இளமையான தோற்றத்தை பெற முடியும்.

டிப்: 4

சருமத்திற்கு தேவையான விட்டமின்கள் நிறைந்த பொருளாக அவகேடோ கருதப்படுகிறது. இந்த அவகேடோவை நன்றாக அரைத்து இதன் விழுதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகம் இளமையான தோற்றத்தை பெறும்.

டிப்: 5

முடிந்த அளவிற்கு முகத்தையும் கண்களையும் மிதமான குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இப்படி நாம் தினமும் குறைந்தது மூன்று முறையாவது மிதமான குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவுவதன் மூலம் முகத்தில் ஈரத்தன்மை ஆனது தக்க வைக்கப்பட்டு சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியாக முடியை வளர செய்ய அழகு குறிப்பு

இந்த ஃபேஸ் பேக் அனைத்துமே நம் கண்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் நம் முகத்திற்கு மொத்தமாக பயன்படுத்துவதன் மூலம் கண்கள் மட்டும் இளமையாகாமல் முகமும் இளமையாக தோற்றமளிக்கும்.

- Advertisement -