நீங்க முன்னேறவே கூடாது என்று நினைப்பவர்கள் முன்பு வாழ்ந்து காட்ட, இந்த பொருளை மட்டும் எரித்து சாம்பல் ஆக்கி விடுங்கள் போதும். இப்படி செய்தால் அவர்களின் தீய எண்ணமும் இந்த தீயில் பொசுங்கி விடும்.

- Advertisement -

இன்றைய கால சூழலில் ஒரு மனிதன் முன்னேறுவதை பார்த்து சக மனிதனாக சந்தோஷப்படுவது என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இவன் மட்டும் முன்னேறுகிறான் நாம் இப்படியே இருக்கிறோமே என்ற பொறாமையும், வைத்தெரிச்சலும் தான் இன்றைக்கு அதிக அளவில் இருக்கிறது. அவர்கள் இந்த அளவிற்கு முன்னேற எத்தனை பாடுபட்டு இருப்பார்கள், எத்தனை துன்பங்களை சந்தித்து இருப்பார்கள் என்பதை பற்றி எல்லாம் பிறருக்கு கவலை இல்லை. நாம் இப்படி இருக்கிறோம் அவன் மட்டும் நன்றாக இருக்கிறானே அது இருக்கக் கூடாது இப்படி மட்டும் தான் எண்ணுவார்கள். இந்த தீய எண்ணங்களில் இருந்தும் கண் திருஷ்டியில் இருந்தும் நம்மை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். பொதுவாகவே சுற்றி போடுவது போன்ற விஷயங்களாகட்டும் அல்லது நம் கண் திருஷ்டியை போக்க வேறு எதை செய்வதாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வது மிகவும் உத்தமம். இந்த கிராம்பு பரிகாரத்தையும் ஞாயிற்றுக்கிழமையில் தான் செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு மூன்று கிராம்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். கிராம்பு கொஞ்சம் கூட உடைந்து இருக்கக் கூடாது. கிராம்பின் ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லா இடமும் நன்றாக இருக்க வேண்டும். சிறு துண்டு கூட உடைந்திருக்க கூடாது இது மிகவும் கவனமாக பார்த்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் நின்று கொண்டு இந்த கிராம்பை கையில் வைத்து திருஷ்டி சுற்றுவது போல, இடமிருந்து வலம் மூன்று முறை, வலம் இருந்த இடம் மூன்று முறை, மேலிருந்து கீழாக இப்படி கை கால்கள் என தனித் தனியாக சுற்ற வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் நமக்கு சுற்றி போட்டால் நல்லது.

- Advertisement -

யாரும் இல்லாத பட்சத்தில் நமக்கு நாமே கூட சுற்றிக் கொள்ளலாம். இப்படி சுற்றிய பிறகு வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து ஒரு கொட்டாங்குச்சியிலோ அல்லது சாம்பிராணி தூபம் போடும் தூப காலிலோ இதை போட்டு எரிக்க வேண்டும். இந்த கிராம்பை பொருத்த வரையில் முழுவதுமாக எரியாது கடைசியில் கொஞ்சம் மிஞ்சும். உங்களால் எரிக்க முடிந்த அளவிற்கு எரித்தது போக மீதம் உள்ளவற்றை பேப்பரில் சுற்றி பிறர் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இதை வாரவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்தாலும் நல்லது. அப்படி முடியவில்லை என்றால் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது இதை செய்து விட்டால், உங்கள் வீட்டிற்கும் உங்களுக்கும் கண் திருஷ்டியாலு மற்றவர்களின் தீய செய்கையினாலோ எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: கிடுகிடுவென தங்கம் சேரவும், அடமானம் வைக்கப்பட்ட நகை மீண்டும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும் நகையை மீட்டதும் செய்ய வேண்டிய வேலை என்ன தெரியுமா?

இதைத்தான் நம் முன்னோர்களும் அந்த காலத்தில் வாரம் ஒரு முறையாவது வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் அமர செய்து ஒன்றாக சுற்றி போட்டு திருஷ்டி கழிப்பார்கள். இதையெல்லாம் ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்வதற்கு அந்த காலத்திலேயே பின்பற்றிய வழக்கங்கள் தான். இந்த முறையில் நீங்களும் உங்களுக்கு ஏற்பட்ட கண்திருஷ்டியும், கெட்ட எண்ணங்களின் தாக்குதலையும் வேரோடு எரித்து நீங்கள் துன்பப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் முன்பு சந்தோஷமாக வாழ்ந்து காட்டுங்கள்.

- Advertisement -