அக்கம் பக்கம் கண்ணு யாரு கண்ணும் படாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் தவறாமல் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

lemon-salt-kula-dheivam
- Advertisement -

நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நம் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுபவர்களாக மட்டுமே இருக்க முடியாது. சிலர் பொறாமைப்படுவதும் உண்டு. இப்படிப்பட்ட பொறாமை கண்கள் நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கக்கூடும். அக்கம் பக்கம் வீட்டார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருமே இதில் அடங்குவர். இப்படிப்பட்ட பொறாமை படக்கூடிய எண்ணங்கள் நமக்கு எதிராக செயல்படுவதை கண் திருஷ்டி என்கிறோம். இந்த கண் திருஷ்டியை ஒழித்து கட்ட வாரம் தோறும் தவறாமல் ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்து வந்தாலே போதும். வேறு எதுவும் பெரிதாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியான ஒரு எளிய பரிகாரம் என்ன? என்பதைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

‘கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது’ என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே கண் திருஷ்டியை அலட்சியம் செய்யாமல் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த எளிய பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் நம்முடைய வளர்ச்சியின் மீது பொறாமைப்படுபவர்கள், தனிநபர் மீதான கண்திருஷ்டி அல்லது குடும்பத்தின் மீதான திருஷ்டிகள் அனைத்தும் கழிய செய்யும்.

- Advertisement -

பொதுவாக வீடு, கடை, அலுவலகங்கள் போன்றவற்றுக்கு கூட அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் திருஷ்டி கழிப்பது வழக்கம். அது போல வீட்டில் உள்ளவர்களுக்கும் சேர்த்து திருஷ்டி கழித்து வந்தால் இத்தகைய கெட்ட பார்வைகள் நம்மை அண்டாமல் இருக்கும். எல்லோருக்கும் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது நாம் நன்றாக இருப்பது போல தான் தோன்றும். ஆனால் நமக்குத் தான் தெரியும் நாம் நன்றாக இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்? அல்லது இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறோம்? என்பது நாம் அறிந்த ரகசியம் மட்டுமே ஆகும்.

நம்முடைய வீட்டில் புதிதாக என்ன வாங்கி இருக்கிறோம்? எவ்வளவு செலவு செய்கிறோம்? நம்முடைய வருமானம் என்ன? என்பது போன்ற விவரங்களை எப்பொழுதும் அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது. எல்லாவற்றையும் எல்லாரிடமும் உளறி கொட்ட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. நம்மை நாம் தான் பார்த்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை தோறும் காலையில் சூரியன் உதித்த பிறகு ஒரு நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழங்களில் புள்ளிகள் இருக்கக் கூடாது, அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். பரிகாரத்திற்கு புள்ளிகளற்ற எலுமிச்சை பழம் தான் உகந்தது. இந்த எலுமிச்சை பழங்களை நான்காக வெட்டிக் கொள்ளுங்கள். முழுமையாக வெட்டாமல் முக்கால் பாகம் வெட்டி அதற்குள் உப்பை தடவிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
எப்பேர்ப்பட்ட துன்பத்தில் நீங்கள் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து சுலபமாக வெளி வர புதன் கிழமையில் இந்த தீபத்தை ஏற்றினால் போதும். மலை போல் வந்த துன்பம் கூட பனி போல் கரைந்து காணாமல் போய் விடும்.

பிறகு நான்கு எலுமிச்சை பழங்களையும் இதே போல வெட்டி உப்பை தடவி நம் வீட்டில் இருக்கக்கூடிய நான்கு மூலைகளிலும் இதை கொண்டு போய் வையுங்கள். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எல்லா திசைகளிலும் வைத்து அப்படியே விட்டு விடுங்கள். பிறகு சூரியன் மறைந்த பின்னர் இரவு வேளையில் இவற்றை கைப்படாமல் எடுத்து கொண்டு போய் நான்கு திசைகளிலும் வெளியில் தூக்கி வீசி எறிந்து விடுங்கள். அவ்வளவுதான், பின்னர் கைகளை வந்து அலம்பி கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள், நெகட்டிவ் வைப்ரேஷன்கள், பொறாமைக் கண்கள், கண்ணேறுகள், கண் திருஷ்டிகள், தீய சக்திகள், துர் தேவதைகள், காத்து கருப்பு என்று அனைத்தும் ஒழியும்.

- Advertisement -