எப்பேர்ப்பட்ட துன்பத்தில் நீங்கள் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து சுலபமாக வெளி வர புதன் கிழமையில் இந்த தீபத்தை ஏற்றினால் போதும். மலை போல் வந்த துன்பம் கூட பனி போல் கரைந்து காணாமல் போய் விடும்.

perumal dheepam
- Advertisement -

இந்த மானிடப் பிறவியில் துன்பத்தை அனுபவிக்காமல் வாழ்பவர் என்று ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். ஒருவருக்கு வரும் துன்பம் தான் அவரை மேலும் மெருகேற்றி வாழ்க்கையில் முன்னேற உதவி செய்யும். இது எல்லாம் உண்மை தான் என்றாலும் அந்த நேரங்களில் அதை சமாளித்து வெளி வருவது என்பது உண்மையிலே கடினமான காரியம் தான். நம்மால் தீர்க்க முடிந்த பிரச்சனைகள் தீர்த்து விடுவோம், நம்மையும் மீறி நடக்கும் பிரச்சனைகளுக்கு என்ன செய்வது. இப்படியான சூழ்நிலையில் நாம் தெய்வத்தை சரணடைவதை தவிர வேறு வழி இல்லை. அப்படி ஒரு சரணடைய கூடிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முதலில் வாழ்க்கையில் எந்த ஒரு துன்பம் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த துணிவையும் தைரியத்தையும் பெற கருடாழ்வாரை சரணடைந்தால் போதும். நம்மால் தாங்க முடியாத துன்பத்தில்உழன்று கிடக்கும் போது நம்மை தூக்கி நிறுத்தும் தெய்வமாக இவர் திகழ்கிறார். இந்த பதிவில் நம்முடைய தீராத பிரச்சனைகள் விரைவில் தீர்வதற்கு கருடாழ்வாரை எப்படி வழிப்பட வேண்டும் என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தீராத பிரச்சனைகள் தீர வழிபாடு
இந்த கருடாழ்வார் அனைத்து பெருமாள் ஆலயங்களும் நுழைவாயிலே இருப்பார். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனங்கள் இருப்பது போல இந்த கருடாழ்வார் பெருமாளுக்குரிய முதன்மை வாகனமாக இருக்கிறார். இந்த கருடாழ்வார் ஞானம், தேஜஸ், பலம், ஐஸ்வரியம், சக்தி ஆகியவற்றை அருள்பாளிப்பவராக இருக்கிறார். இவரை வணங்கி வரும் போது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். இன்று அளவிலும் எந்த ஒரு கோவில் விசேஷங்களிலும் அதுவும் குறிப்பாக கும்பாபிஷேகம் போன்ற நேரங்களில் அந்த மந்திர ஒலிக்கு எங்கு இருந்தாலும் வந்து அருள்பாளிப்பவராகவும் இந்த கருடாழ்வார் திகழ்கிறார். அப்படியான கருடாழ்வாரை நாம் பிரச்சனைகள் தீர்க்க எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இவருக்கு உகந்த நாள் புதன்கிழமை ஆகையால் இந்த தீபத்தையும் நீங்கள் புதன்கிழமை ஏற்றி கொள்ளுங்கள். புதன் கிழமை காலை மாலை என உங்களுக்கு முடிந்த நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம். ஆனால் இந்த தீபம் பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் முன்பு தான் ஏற்ற வேண்டும். ஒரு வேளை நீங்கள் இருக்கும் இடத்தில் கருடாழ்வார் இல்லையெனில் பெருமாள் கோவிலிலும் கருடாழ்வாரை நினைத்து ஏற்றலாம்.

- Advertisement -

புதன்கிழமைஅன்று ருடாழ்வாருக்கு 12 நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். இத்துடன் நல்ல வாசம் மிக்க மல்லிகை மலரையும் மரிக்கொழுந்தையும் வாங்கி உங்கள் கைகளாலேயே தொடுக்க வேண்டும். இதை மாலையாகத் தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது கொஞ்சமாக தொடுத்தாலும் கூட போதும். இந்த 12 தீபத்தையும் 12 வாரங்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை 12 வாரம் ஏற்றி முடிக்கும் முன்பாகவே உங்களுடைய துன்பம் காணாமல் போயிருக்கும் என்பது உறுதி.

இதையும் படிக்காலமே: வாரம் ஒரு முறை இந்த 3 பொருட்களை சேர்த்து சாம்பிராணி தூபம் போடுங்கள். வீட்டை பிடித்த பீடை நீங்கி, வறுமை நீங்கி, ஐஸ்வர்ய கடாட்சம் அமைதியாக தங்கும்.

இந்த கருடாழ்வார் நல்ல நேர்மறையான எண்ணங்களும், சிந்தனைகளும் உள்ளவர்களுடன் எப்பொழுதும் துணையாக இருப்பார். அதே போல் நம்மை சுற்றி எப்பொழுதும் நேர்மறையானவற்றையே வைத்திருக்கும் போதும் நமக்கு அருள் பாலிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. எப்படி கோவில்களில் மந்திர ஒலி கேட்டதும் அங்கு வந்து அருள் பாலிக்கிறாரோ, அதே போல் நம்மை சுற்றியும் நல்லதொரு சூழ்நிலையை அமைத்துக் கொள்ளும் போது நிச்சயம் அவர் நம்முடன் இருந்து நம் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். இந்த தகவலோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்

- Advertisement -