வீட்டில் எப்போதும் சண்டை வருகிறதா? குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறதா? நாளை அமாவாசையில் இந்த பொருளை வைத்து இப்படி சுற்றி போட்டுங்கள் பிரச்சனைகள் இருந்த இடமே தெரியாது.

- Advertisement -

கண் திருஷ்டி ஆனது மற்ற அனைத்தையும் விட ஒரு கொடிய வியாதியைப் போன்றது தான். வியாதி என்று வந்தால் கூட இது தான் என்று கண்டுபிடித்து மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த கண் திருஷ்டி வந்துவிட்டால் என்ன காரணம் என்றே தெரியாமல், வீட்டிலும் பிரச்சனைகள் சூழும், உடல் நிலையும் பாதிக்கும் என்ன தான் செய்வது என்று தெரியாமல் போகும். பெரியவர்கள் அதனால் தான் கல்லடி பட்டால் கூட படலாம் கண்ணாடி படக்கூடாது என்று சொல்லி வைத்தார்கள். நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் முத்தான வார்த்தைகள் தான். வெறும் பேச்சோடும் இதை நிறுத்தி விடவில்லை இதிலிருந்து தப்பிக்கும் வழியையும் நமக்கு அவர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

நாம் பெரும்பாலும் நினைத்துக் கொள்வது குழந்தைகளுக்கு கண் திருஷ்டி வந்த சுற்றி போட வேண்டும் என்று மட்டும் தான். ஆனால் குழந்தைகளை மட்டும் எந்த கண் திருஷ்டி தாக்காது. பெரியவர்களையும் இது தாக்கவே செய்யும். கண் திருஷ்டி வந்துவிட்டால் அவர்களால் எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியாது சோம்பேறித்தனமாகவே இருப்பார்கள். சோம்பேறித்தனம் வந்து விட்டாலே அடுத்தடுத்த பிரச்சனைகள் வர ஆரம்பித்து விடும். இது மட்டுமின்றி காரணமே இல்லாமல் உடல் நிலை பாதிக்கும், வீட்டில் கணவன் மனைவிக்கு அடிக்கடி சண்டை வருவது, குழந்தைகளோ காரணமே இல்லாமல் அழுது கொண்டே இருப்பார்கள், சரியாக சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு என்ன செய்கிறது என்று சொல்லவும் தெரியாது இப்படி இந்த கண் திருஷ்டி பாடாய்படுத்து விடும். இதை எளிமையாக எல்லோருமே செய்து கொள்ளக்கூடிய ஒரு சின்ன பரிகாரம் என்று கூட இதை கூறலாம். கல்லுப்பும் காய்ந்த மிளகாய் உன் கையில் இருந்தால் போதும் அனைத்து கண் திருஷ்டியும் காணாமல் போகிறது. பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்றாகவே இருக்கும் ஆனால் அதை எப்படி சுற்றி போட வேண்டும் என்பதை தெளிவாக பார்ப்போம்.

- Advertisement -

முதலில் கண் திருஷ்டி செவ்வாய், ஞாயிறு போன்று இரு தினங்களிலும் அமாவாசை தினத்திலும் மட்டும் தான் கழிக்க வேண்டும் மற்ற நாட்களில் கண் திருஷ்டி கழிக்க கூடாது. அதே போல் கண் திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் இந்த உப்பும் காய்ந்த மிளகாயும் முடிந்த அளவிற்கு புதிதாக வாங்கி வந்து கழித்தால் நல்லது. அவசரத்திற்கு வேண்டுமானால் வீட்டில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் கூடுமான வரை புதிதாக வாங்கி வந்து கழிக்க பாருங்கள்.

கண் திருஷ்டிகழிக்க தெற்குத் தவிர மற்ற மூன்று திசைகளில் எந்த திசையில் வேண்டுமானாலும் அமர வைத்து கொள்ளுங்கள். உங்கள் இடது கையில் சிறிதளவு உப்பையும் ஒரே ஒரு காய்ந்த மிளகாய் எடுத்துக் கொள்ளுங்கள் கண் திருஷ்டி பட்டவரின் முதலில் இடமிருந்து வளமாக மூன்று முறையும், அடுத்து வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். அதன் பிறகு கைகளில் வலது கைகளில் மேலிருந்து கீழாக மூன்று முறையும், இடது கை மேல் இருந்து கீழாக மூன்று முறையும் அதே போல் இடுப்பில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இரண்டு பக்கமும் மூன்று முறை இப்படி நம் உடலில் தனித்தனியாக பிரித்து மூன்று முறையாக சுற்றி போட வேண்டும்.

- Advertisement -

இதன் பிறகு நாம் யாருக்கு திருஷ்டி கழிக்கிறோமோ அவர்களை நம் கையில் இருக்கும் உப்பு காய்ந்த மிளகாய் எது மூன்று முறை வீசாக துப்ப செய்து அதை ஒரு கொட்டாங்குச்சி பற்ற வைத்து அதில் போட்டு அதை எரித்து விட்டால் மிகவும் நல்லது இல்லை என்றால் தண்ணீரில் போட்டு விடலாம்.

முச்சந்தி எனப்படும் தெரு முக்குகளில் இதை போடலாம் ஆனால் அதை வேறொருவர் தாண்டினாலும் மிதித்தாலும் எந்த கண் திருஷ்டியின் தாக்கம் அவர்களுக்கும் வர வாய்ப்பு இருக்கிறது எனவே முடிந்தவரை அடுத்தவருக்கு பாதித்தில்லாமல் ஓடும் நீரில் போட்டு விடுங்கள் இல்லை எரித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய வேண்டிய நேரம், புத்தாடை அணிந்து பூஜை செய்யக்கூடிய நேரம் என்ன? இந்த ஆண்டு தீப ஒளியில் எந்த கடவுளை தரிசனம் செய்வது புண்ணியத்தை தரும்?

இதை பொதுவாகவே மாதத்தில் இரண்டு முறை திருஷ்டி கழித்துக் கொண்டால் எந்த காலத்திலும் கண் திருஷ்டியால் நமக்கு எந்த ஒரு தாக்கமும் வராமல் காத்துக் கொள்ளலாம். இனி திருஷ்டி கழிக்கும் பொது இப்படி கழித்து போட்டு பிரச்னை இல்லா வாழ்வு வாழுங்கள்.

- Advertisement -