எந்த ஒரு வீட்டில் நான்கு மூலைகளிலும் இந்த ஒரு பொருள் இருக்குதோ, அந்த வீட்டில் நிச்சயம் துர்சக்திகள் வந்து தங்கிவிடும்.

vasal
- Advertisement -

வீட்டில் கஷ்டம் கஷ்டம் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது. கஷ்டத்தை சரி செய்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முயற்சி என்றால் முதலாவதாக பிரச்சனை ஆரம்பமாக என்ன காரணம் என்று தெரிந்து கொண்டு அந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஜாதக ரீதியாக ஏதாவது பிரச்சனையா என்பதை ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். கெட்ட நேரம் நடக்கிறதா அல்லது கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலின் தாக்கமா கண் திருஷ்டியா என்ன என்று அலசி ஆராய்ந்து பார்பது நல்லது.

இப்படி பிரச்சனைக்கு சரியான பரிகாரத்தை உங்களுடைய குடும்ப ஜோதிடர் சொன்னால் அதை நீங்கள் பின்பற்றலாம். அவர் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்யும் போது நிறைய செலவு ஆகும் எங்களால் அந்த பரிகாரத்தை எல்லாம் செய்ய முடியாது என்பவர்கள் பின் சொல்ல கூடிய இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிறைய காசு செலவு செய்து மாந்திரீகம் தாந்திரீகம் என்று தான் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை‌. கண்திருஷியை கழிக்க, கெட்ட சக்தியை அழிக்கக்கூடிய பரிகாரங்கள் நிறைய நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒருவகையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் நெகட்டிவ் எனர்ஜியை சேகரித்து வைக்கக்கூடிய இடங்கள் என்றால் அது நம் வீட்டில் இருக்கக்கூடிய மூலை முடுக்குகள் தான். மூளை முடுக்குகளில் மேல் பக்கமும் சுத்தமாக இருக்க வேண்டும். கீழ்ப்பக்கமும் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது மேலே ஒட்டடை தங்கி இருக்கக் கூடாது. மூளை முடுக்குகளில் தரையில் ஏதாவது டேபிள், சேர், சோபா போட்டு இருந்தாலும் அதை நகர்த்தி மாதத்திற்கு ஒரு முறை அந்த மூளையை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் சுருள் சுருளாக ஒட்டடையை வைத்துக்கொண்டு கண் திருஷ்டி கழிக்க,  செய்வினையை அகற்ற எந்த பரிகாரம் செய்தாலும் அதன் மூலம் முழு பலனை நம்மால் அடைய முடியாது. பரிகாரம் தோற்றுப் போகும். ஒட்டடையில் தங்கி இருக்கக்கூடிய கெட்ட சக்தியின் ஆற்றல் இரண்டுப்பு மடங்காக இருக்கும்.

துர் சக்திகளுக்கு, துர் தேவதைகளுக்கு தரித்திரத்திற்கு மிகவும் பிடித்த இந்த ஒட்டடையை அதிகம் சேர விடாதீர்கள். மாதத்தில் ஒரு நாளாவது கட்டாயமாக வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சிலர் சொல்லுவார்கள், ஒட்டடையில் லட்சுமி கடாட்சம் இருக்குது. அதை சுத்தம் செய்யக்கூடாது என்று. அதற்காக சிலந்தி வலைக்கட்டி பின்னி வைத்திருக்கும் அளவிற்கு வீட்டை அப்படியே போட்டு வைக்க கூடாது.

- Advertisement -

முதலில் ஒட்டடையை அடித்து வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். கல் உப்பு போட்ட தண்ணீரால் வீட்டை சுத்தமாக துடையுங்கள். ஒரு சிவப்பு நிற சதுர துணியில் ஒரு கைப்பிடி கல்லுப்பு, ஒரு சிறிய துண்டு பரிகார கல், மூன்று மிளகு. சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு தான். இந்த பொருட்களை எல்லாம் வைத்து ஒரு முடிச்சாக கட்டி விடுங்கள் இந்த முடிச்சை முதலில் உங்களுடைய தலையை 3 முறை சுற்றி இந்த முடிச்சை உங்களுடைய வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் சிறிது நேரம் வைத்து எடுக்க வேண்டும்.

இந்த குறிப்பிட்ட மூளை என்றெல்லாம் கிடையாது. உங்க வீட்டின் ஓரமாக ஏதாவது ஒரு மூளையில் வைத்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து இந்த முடிச்சை அப்படியை எடுத்து நிலை வாசலில் வைத்து கொஞ்சமாக கற்பூரம் ஏற்றி, அந்த நெருப்பில் இதை போட்டு விட வேண்டும். கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டாலும் தவறு கிடையாது. உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தும் அப்படியே நெருப்பில் பஸ்பம் ஆக வேண்டும் அவ்வளவுதான்.

தீயில் எல்லா பொருட்களும் எரிந்து முடிந்த பின், மீதம் இருக்கும் கறியை கைப்படாமல் தொடப்பத்தில் எடுத்து குப்பையில் கொட்டி விடுங்கள். மாதத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை செய்யலாம். அமாவாசை தினங்களில் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்கள் வீட்டில் எந்த ஒரு துர் சக்தியும் தங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -