கணவன் மனைவி ஒற்றுமை பெற பரிகாரம்.

otrumai
- Advertisement -

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்றால் குடும்பத்தில் இருக்கும் கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கணவன் மனைவியும் கருத்து வேறுபாடுகளாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ சண்டையிட்டு பிரிந்து அல்லது பிரியக்கூடிய சூழ்நிலையில் இருந்தால் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வார்கள். அது என்ன பரிகாரம் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

கணவனும் மனைவியும் இணைந்து வாழும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை. அன்றைய காலத்தில் கணவன் எப்படி இருந்தாலும் மனைவி கணவனை விட்டுக் கொடுக்காமல் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டால் கூட கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு வரும் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதே சமயம் மனைவியை விட்டு பிரிந்து தன்னிச்சையாக செயல்படும் ஆண்களும் பலர் இருக்கிறார்கள். இப்படி இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நல்ல சுபமுகூர்த்த நாளாக பார்த்து செய்ய வேண்டும். இரண்டு முனையும் உடையாத முழு விரலி மஞ்சள் இரண்டு வாங்கி வர வேண்டும். அதில் ஒரு மஞ்சளில் கணவனின் ஆடையிலிருந்து சிறிது நூலை எடுத்து கட்ட வேண்டும். மற்றொரு மஞ்சளில் மனைவியின் ஆடையில் இருந்து நூலை எடுத்து கட்ட வேண்டும். பிறகு அந்த இரண்டு மஞ்சளுக்கும் சந்தனம் குங்குமம் இட வேண்டும். சுத்தமான பன்னீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த பன்னீரில் ஏதாவது ஒரு பூவை போட்டு அந்த பூவால் பன்னீரை எடுத்து ஆண் துணியின் நூலை கட்டிய மஞ்சளில் அந்த ஆணின் பெயரை சொல்லி 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். அதேபோல் பெண் துணியின் நூலை கட்டிய மஞ்சளில் பெண்ணின் பெயரை சொல்லி 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு மஞ்சள் நிற நூலை எடுத்து இந்த இரண்டு மஞ்சளையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கட்டிய இந்த மஞ்சள் துண்டுகளுக்கு சந்தனம் குங்குமம் இட்டு மறுபடியும் பன்னீரால் இருவரின் பெயர்களையும் 108 முறை ஒன்றாக கூறி அதாவது கணவன் பெயரையும் மனைவி பெயரையும் ஒன்றாக கூறி 108 முறை பன்னீரால் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்த இந்த மஞ்சள் துண்டுகளை வீட்டு பூஜை அறையில் 18 நாட்கள் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பூஜை செய்யும்பொழுது இந்த இரண்டு மஞ்சளுக்கும் தீப தூப ஆராதனை காட்ட வேண்டும்.

19ஆவது நாள் அருகில் இருக்கும் கோவிலில் இருக்கக்கூடிய புற்றுக்குள் இந்த மஞ்சளை போட்டு விட வேண்டும். புற்று இல்லை என்று நினைப்பவர்கள் கடலில் போடலாம். அல்லது கோவிலில் இருக்கும் குளத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் உடனே பலிக்க பரிகாரம்

இவ்வாறு செய்வதன் மூலம் கணவன் மனைவி என்றென்றைக்கும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வார்கள்.

- Advertisement -