- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதல் உடனே பலிக்க பரிகாரம்

வேண்டுதல் உடனே பலிக்க பரிகாரம்

- Advertisement -

நாளைக்கு அப்படி என்ன அதிசய நாள். நாளை கழித்து தானே தீபாவளி வருகிறது. நாளைக்கு என்ன நாளாக இருக்கும் என்று எல்லோரும் கண்டிப்பாக யோசிப்பீங்க. நாளைக்கு 11.11.2024 நான்கு ஒன்று, ஒன்றாக சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளை நாம் தவற விடலாமா.

இந்த நாளில், குறிப்பிட்ட இந்த நேரத்தில் உங்களுடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் சொன்னால், நீங்கள் வேண்டிய வேண்டுதல் உடனே நடக்கும். அப்படியா நாளைக்கு நினைத்ததெல்லாம் நடக்குமா? சோதித்து பாக்காதீங்க. நம்பிக்கையோடு ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் கேட்ட வரத்தை இந்த பிரபஞ்சம் கூடிய சீக்கிரம் கொடுக்கும்.

- Advertisement -

11 11 நாளைய தினம் செய்ய வேண்டிய பரிகாரம்

முதலில் இந்த பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும் என்று நேரத்தை பார்த்து விடுவோம். நாளை 11-ம் தேதி. நாளை காலை 11.00 மணிக்கு சரியாக இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். அப்படி 11 மணியை தவறவிட்டால் 11.11 மணி அளவில் இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். காலை நேரத்தை தவறவிட்டவர்கள், இரவு 11.00 மணி அல்லது இரவு 11.11 மணிக்கு இந்த வேண்டுதலை வைக்க வேண்டும்.

உங்களுடைய ஏதாவது ஒரு கோரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆசை எனக்கு முதன்மையான ஆசை. இது சீக்கிரம் நிறைவேறியே ஆக வேண்டும். நிறைய முயற்சிகள் எடுத்து விட்டேன். ஆனால் தோல்வி மட்டும் தான் எனக்கு கிடைத்தது என்று நிச்சயம் ஒவ்வொரு மனிதனுக்குள் ஒவ்வொரு விஷயம் இருக்கும்.

- Advertisement -

அது பண பிரச்சினை, மனப்பிரச்சனை, கடன் தொல்லை குடும்பப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி. அதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து கொள்ளுங்கள். அந்த காகிதத்துக்கு மேலே முதலில் 1111 என்ற எண்ணை எழுதி விடுங்கள்.

பிறகு அதற்கு கீழே வரிசையாக 11 முறை உங்களுடைய பிரச்சனை சரியாகிவிட்டதாக எழுத வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு திருமணம் நடக்க வில்லை ரொம்ப நாள் முயற்சி செய்து கொண்டு இருக்கீங்க. ‘எனக்கு நல்லபடியாக வரன் அமைந்துவிட்டது’ என்று 11 முறை எழுதுங்கள். ரொம்ப நாளா வேலை கிடைக்கல ‘எனக்கு நல்லபடியாக நல்ல சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்து விட்டது’ அப்படின்னு 11 முறை எழுதுக.

- Advertisement -

நிறைய கடன் சுமை இருக்கிறது. ‘வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கின்றேன்’. அப்படின்னு எழுதுங்க. இப்படி நடக்காத நல்ல விஷயத்தை, நடந்ததாக நாளைய தினம் 11 மணி அளவில், 11 முறை நீங்கள் எழுதினால் நடக்காத அந்த நல்ல விஷயம் நிச்சயம் நடக்கும்.

இப்படி 11 முறை எழுதிவிட்டு அந்த விஷயம் நல்லபடியாக நடந்து விட்டதாக கண்களை மூடி நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்க நல்லா இருக்கீங்கன்னு மனுதாரர்கள் முதலில் நீங்கள் நம்ப வேண்டும் அப்போதுதான் நல்லது நடக்கும். எந்த ஒரு வேலையை நாம் செய்தாலும், எந்த பிரார்த்தனையை செய்தாலும் அது குலதெய்வத்தை நினைத்து தானே செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தையும் குலதெய்வத்தை நினைத்து செய்யுங்கள். மேலே சொன்ன நேரத்தை மட்டும் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். நான்கு வாய்ப்புகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தை தவறவிட்டாலும் இன்னொரு நேரத்தில் நீங்கள் எழுதலாம்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து பிரச்சினையை சரி செய்யும் எளிமையான பரிகாரம்

நான்கு நேரத்தையும் பயன்படுத்திக் கொள்வதாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் செய்து பலன் அடையுங்கள்.

சற்று முன்