கணவன் மனைவி வசிய பரிகாரம்

fight
- Advertisement -

வசியம் என்ற வார்த்தையை கேட்டவுடன் எல்லோருடைய மனதும் தவறாகத்தான் சிந்திக்கும். வசியம் என்பது தவறான வார்த்தை கிடையாது. மனைவியின் பேச்சுக்கு கட்டுப்படாத கணவரை, வாழ்க்கையில் தடம் மாறிச் செல்லக் கூடிய கணவரை, நல்லபடியாக மாற்றி வழிநடத்தி, மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்க வைப்பதற்காக உண்டான ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நிறைய வீடுகளில் மனைவிக்கு மரியாதை இருக்காது. மனைவி பேச்சுக்கு செவி கொடுக்க மாட்டார்கள். எல்லோருக்கும் புரியும் படி சொன்னால், மனைவியை ஒரு டம்மி பீஸ் ஆக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் எல்லாம் பண பிரச்சனையும் சரி, மற்ற பிரச்சனைகளும் சரி தலைவிரித்து ஆடும். காரணம் கணவன் தன் இஷ்டத்துக்கு குடும்பத்தை ஆட்டி வைப்பார்.

- Advertisement -

இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுடைய வீட்டில் இருந்தால் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை தவற விடாதீங்க. சொல்பேச்சு கேட்காத கணவரை திருத்த இது ஒரு எளிமையான பரிகாரம். இந்த பரிகாரம் செய்வதற்கு உங்கள் கணவர் பயன்படுத்தும் ஒரு துணி தேவை. அது, அவர் உடுத்திய துவைத்த துணியாக இருக்க வேண்டும். ஒரு மண் அகல் விளக்கு, விளக்கெண்ணெய், தாமரை தண்டு திரி, இரண்டு கிராம்பு, இது இருந்தால் போதும். இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்ற கூடாது.

தவிர வரவேற்பு அறையில் இந்த விளக்கை ஏற்றலாம், அல்லது உங்களுடைய வீட்டில் வேறு ஏதாவது அறை இருந்தால் அந்த அறையிலும் இந்த விளக்கு ஏற்ற பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு தாம்பூல தட்டில் உங்கள் கணவர் பயன்படுத்திய துணியை மடித்து வைத்துவிட்டு, அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து விளக்கு எண்ணெய் ஊற்றி, தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

விளக்கு வடக்கு திசை நோக்கி எறிய வேண்டும். இந்த விளக்கின் நெருப்பு அந்த துணியில் படாமல் ஜாக்கிரதையாக ஏற்றவும். கையில் இரண்டு கிராம்பை வைத்துக்கொண்டு ‘என் கணவர் என் சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும். கணவனுக்கு ஏதாவது கெட்டவகாசம் இருந்தாலும் கெட்ட பழக்க வழக்கங்கள் இருந்தாலும் அதை உங்கள் வாயால் சொல்லி’ அதில் இருந்து அவர் விடுபட வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து இந்த இரண்டு கிராம்பை அகல் விளக்கில் இருக்கும் விளக்கு எண்ணெயில் போட்டு விடுங்கள். அவ்வளவுதான்.

ஒரு மணி நேரம் அந்த விளக்கு தானாக எரியட்டும் நீங்கள் சென்று உங்களுடைய வேலையை பார்க்கலாம். விளக்கு எரிந்து முடிந்தவுடன் அதில் மிச்சம் எண்ணெய் இருக்கும் அல்லவா. அதை மட்டும் தினமும் சேகரித்து ஒரு டப்பாவில் ஊற்றிக் கொள்ளுங்கள். 48 நாள் இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெயை தினமும் சேகரித்து வர வேண்டும். இரண்டு சொட்டு, இரண்டு சொட்டு எண்ணெயை சேர்க்கும்போது ரொம்ப குறைந்த அளவில்தான் இந்த எண்ணெய் உங்களுக்கு கிடைக்கும். இந்த எண்ணெயை உங்களுடைய கணவரின் உச்சந்தலையில் தடவி விட்டால், உங்கள் கணவர் உங்கள் பேச்சுக்கு வசியம் ஆவார். கெட்ட பழக்க வழக்கிலிருந்து விடுபடுவார் என்பது நம்பிக்கை. 48 நாள் இந்த வழிபாட்டை முடித்துவிட்டு அடுத்து வரக்கூடிய நாட்களில் அந்த எண்ணெயை உங்கள் கணவர் தலையில் தடவ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் காணாமல் போக திருச்செந்தூர் முருகன் வழிபாடு

அடுத்த 48 நாட்களுக்குள் உங்களுடைய கணவரின் நடவடிக்கையில் நல்ல வித்தியாசம் தெரியும். கெட்ட பழக்க வழக்கத்தில் இருந்து விடுப்பட்டு கெட்ட சாவகாசத்திலிருந்து விடுபட்டு உங்கள் பேச்சைக் கேட்டு வாழ தொடங்கி விடுவார். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். பெண்கள் இந்த பரிகாரத்தை தவறாக எதற்கும் பயன்படுத்திவிட கூடாது ஜாக்கிரதை. நிச்சயம் பிரச்சனை உங்களுக்கு தான் வரும். நல்லதை நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்து பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -