இந்தத் தீபத்தை மட்டும் வீட்டில் ஏற்றவே கூடாது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை, பிரிவுக்கு இதுவும் ஒரு காரணம்.

fight
- Advertisement -

கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளது. அதில் சில காரணங்கள் நமக்கு தெரிந்திருக்கும். சில காரணங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்குமா என்ன, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு காரணத்தை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகிறேன். அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் சில வரைமுறைகளை நமக்கு வகுத்துத் தந்துள்ளார்கள். இந்த காலத்தில் நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதையெல்லாம் நாம் மாற்றிக் கொள்கின்றோம். கூடுமானவரை முன்னோர்கள் பின்பற்றிய வழியை நாம் பின்பற்றினால் பிரச்சனை இல்லையே. ஆதலால் சாஸ்திர சம்பிரதாயங்களை மாற்ற வேண்டாம்

வீட்டில் ஏற்றக்கூடாத தீபம் எது. பரிகாரத்திற்கு ஏற்ற கூடிய எந்த தீபத்தையும் கூடுமானவரை வீட்டில் ஏற்ற வேண்டாம். அதை கோவிலில் சென்று ஏற்றுவது சிறந்த வழி. எலுமிச்சை பழ தீபம், பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம், இவை அனைத்துமே பெரும்பாலும் பரிகாரத்திற்கு ஏற்படக்கூடிய தீபங்கள் தான். இந்த தீபத்தை எல்லாம் முடிந்த வரை கோவிலுக்கு சென்று ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் சில பேர் சொல்லி நாம் கேள்விபட்டிருப்போம். வீட்டில் தேங்காய் தீபம் ஏற்றலாம். எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றலாம் என்று சொல்லுகிறார்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு ஏதோ ஒரு சொத்து பிரச்சனை அல்லது வீட்டில் வேறு ஏதோ ஒரு பிரச்சனை. அந்த பிரச்சனை சரியாக வீட்டில் எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றுங்கள் என்று, உங்கள் ஜோதிடரோ அல்லது தெரிந்தவர்கள் யாரோ சொல்கிறார்கள்.

நீங்களும் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும் சாறை பிரிந்து எலுமிச்சம்பழத்தை தலைகீழாக திருப்பி பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றுவீர்கள். நீங்கள் எந்த வேண்டுதலை நினைத்து இந்த தீபத்தை ஏற்றினீர்களோ அந்த வேண்டுதல் பலிக்கலாம். ஆனால், வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வரும். காரணம் எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி தானே தீபம் ஏற்றி இருக்கின்றோம்.

- Advertisement -

உடைந்த எந்தப் பொருளாக இருந்தாலும் அதை வீட்டில் வைத்து இறைவனுக்கு வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். அதே போல் தான் இந்த எலுமிச்சம்பழமும். வெட்டப்பட்ட எலுமிச்சம்பழத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்களுக்கு சண்டை சச்சரவு வரும். குறிப்பாக குடும்பத் தலைவன் தலைவி, கணவன் மனைவிக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதேபோல் தான் தேங்காயும். வெண்பூசணி, இந்த பரிகார தீபங்களை கூடுமானவரை வீட்டில் ஏற்ற வேண்டாம். கோவிலில் ஏற்றினால் அது வேறு. கோவிலில் தினம் தினம் முறையான பூஜைகளும் உண்டு. பலிபீடம், கொடி மரங்களும் முறையாக மந்திரங்கள் ஓதி சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி வருகின்றார்கள். ஆகவே, கோவிலில் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம், நமக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. வீடு என்பது அப்படி கிடையாது அல்லவா. சாத்திர சமுதாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், முன்னோர்கள் சொன்னபடி வழிபாட்டு முறையை பின்பற்றினாலே போதும். வீட்டில் நிம்மதி நிலையாக இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -