கணவனை மனைவி இப்படி அழைப்பது சரியா? தவறா? ஏன் அப்படி அழைக்கக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியுமா?

couple-marraige-mangalyam
- Advertisement -

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே எந்த அளவிற்கு ஒற்றுமையாக நடந்து கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு பிள்ளைகளும், மற்றவர்களும் அவர்களுடன் இணைந்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பது வழக்கம். பாரம்பரிய குடும்ப வழக்கத்தின்படி கணவன், மனைவியை இப்படித் தான் அழைக்க வேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு உண்டு. ஆனால் மாறி வரும் காலத்திற்கு ஏற்ப இந்த கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்ந்து விட்டன. ஒரு கணவன், மனைவியை இப்படி அழைப்பது சரியா? தவறா? அவ்வாறு அழைக்கக் கூடாது என்றால் அது ஏன்? என்கிற சுவாரஸ்யத் தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கணவன், மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் மிகவும் புனிதமான ஒரு பந்தத்திற்கு கட்டுப்பட்டு உள்ளது. ஆனால் அதைத் தாண்டி குடும்பத்தில் பெரியவர்களும், சிறியவர்களும் சேர்ந்து இருப்பதால் அவர்களது முன்னிலையில் நீங்கள் கணவனை அழைக்கும் முறை இங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. கணவன், மனைவி இருவரும் மட்டுமே இருக்கும் இல்லங்களில் எப்படி வேண்டுமானாலும் நீங்கள் இருந்து கொள்ளலாம் ஆனால் கூட்டாக இருக்கும் ஒரு குடும்பத்தில் சில விதிமுறைகளை கடைபிடித்தால் தான் அது அழகு.

- Advertisement -

கணவன், மனைவியை ஒருமையில் நீ, வா, போ அல்லது வாடா, போடா என்று அழைப்பது இன்று ரொம்பவே ஃபேஷனாகி போய்விட்டது. ஒருமையில் அழைக்கும் பொழுது அங்கு மரியாதை குறைகிறது. கணவன், மனைவிக்குள் இருக்கும் பாதி பிரச்சனைகளுக்கு காரணம் அவர்கள் உபயோகிக்கும் இது போன்ற வார்த்தைகளால் தான் உருவாகி இருக்கும். சாதாரணமான சண்டையை கூட மிகப் பெரிதாக காட்டக்கூடிய வகையில் இந்த வார்த்தைகள் மாற்றிவிடும்.

அதுவே நீங்கள் தமிழ் பாரம்பரிய முறைப்படி மரியாதை கொடுத்து பன்மையில் அழைக்கும் போது, ஏதாவது ஒரு சண்டை என்றால் கூட அது அவ்வளவு பெரிதாக மாறுவதில்லை. இதற்கு மிக முக்கிய காரணம் நாம் உபயோகிக்கும் இந்த மரியாதையான வார்த்தைகள் தான். ஒரு விஷயத்தை மரியாதையாக கூறும் பொழுது அங்கு சண்டை குறைகிறது, ஆனால் எதார்த்தம் என்கிற பெயரில் மரியாதை இல்லாமல் கூறும் பொழுது அதன் அர்த்தம் முற்றிலும் மாறி விடுகிறது. இதனால் கோபம், வெறுப்பு அதிகமாகுமே தவிர குறைய போவது ஒன்றுமில்லை.

- Advertisement -

கணவனை மனைவி நீ, வா, போ அல்லது வாடா, போடா என்று அழைப்பது பெரும்பாலும் ஒரு பெண்ணும், ஆணும் அல்லது அந்த கணவனும், மனைவியும் இந்த காலகட்டத்தில் அதிகமாக விரும்புகிறார்கள். இதனால் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கும் என்றும், தோழமையாக உணர முடியும் என்றும் அவர்களுடைய கருத்தாக இருந்து வருகிறது. தோழமையை வார்த்தைகளில் தான் வெளிப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கணவன், மனைவிக்கு தோழனாகவும், மனைவி, கணவனுக்கு தோழியாகவும் செயல்களால் இருக்கலாம் ஆனால் வார்த்தைகளில் நீங்கள் ஒருமையாக உபயோகிக்கும் பொழுது அது பல இடங்களில் இடைஞ்சலாக இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இன்னும் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் மருமகள், மகனை இப்படி கூப்பிடும் பொழுது உங்கள் மேல் இருக்கும் அபிப்பிராயம் வேறுபடுகிறது. அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதிற்குள் இருக்கத் தானே செய்யும்? எங்கள் வாழ்க்கை, எங்கள் உரிமை என்று எப்படி வேண்டுமானாலும் இருப்பது குடும்ப உறவுகளுக்குள் சரிவராது! எல்லோரையும் அனுசரித்து, எல்லோர் மனமும் கோணாமல் நடந்து கொள்ளும் இளைய சமுதாயத்தினர் மட்டுமே என்றும் வருங்காலத்திற்கு எடுத்துக்காட்டாக அமைவார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

- Advertisement -