இந்த கனவுகள் கண்டால் மட்டும் யாரிடமும் சொல்லி விடாதீர்கள். ராஜயோகத்தை தரும் அதிஷ்ட கனவுக்கான பலனை தவற விட்டு விடுவீர்கள். ஒருமுறை தவற விட்டால் மறுபடியும் இந்த யோக வாய்ப்பு வராது.

- Advertisement -

கனவு என்பது நம் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஒரு மனிதன் நல்ல ஆழ்நிலை உறக்கில் இருக்கும் போது அவனுள் தோன்றும் எண்ண அலைகள் தான் கனவு பலன்களாக அறியப்படுகிறது. கனவு குறித்து பல்வேறு வகையான சாஸ்திர குறிப்புகள் இருக்கிறது. இப்போது இந்த பதிவில் சில கனவுகளின் பலன்கள் குறித்த தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஒரு மனிதன் நல்ல ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது தோன்றும் கனவுகளை பொறுத்து அவனுடைய வாழ்வில் நடக்கவிருக்கும் நன்மை தீமைகளை அறிந்து கொள்ள முடியும். இந்த கனவுகளுக்கான பலன்களை குறித்து ஆன்மிகத்தில் நிறைய பலன்களை கூறியிருக்கிறார்கள். இப்போது இந்த கனவுகளுக்கான பலன்கள் என்ன என்பதை தான் நாம் பார்க்க போகிறோம். அந்த வகையில் சில கனவுகளை நாம் வெளியில் கூறினால் நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டமானது தடைப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. அந்த கனவுகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தூக்கத்தில் பறப்பதை போலவும், மேக கூட்டங்களுக்கு இடையில் உலா வருவதை போலவும், புதையலை காண்பதை போலவும்,நல்ல பிரகாசமான ஒரு இடத்தை காண்பது போலவும், பெரிய பூந்தோட்டத்திற்கு இடையில் இருப்பது, மழலைகளுடன் இருப்பது, இப்படி மனதிற்கு நிறைவே தரும்படியான கனவுகள் வந்தால் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம். இந்த கனவுகளை யாரிடமும் பகிரக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது . இந்த கனவுகளை வெளியில் சொல்வதானால் அந்த கனவுகளுக்கான பலன்கள் உங்களுக்கு கிடைக்காமல் போய் விடும்.

அதே போல் சில கனவுகளை வெளியில் சொல்ல வேண்டுமென்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. அது எப்படியான கனவுகள் என்றால், கனவில் உங்களை மாடு முட்டுவது போல, பாம்பு துரத்துவதை போல, தீப்பற்றி எரிவது போல, மனதிற்கு சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடிய கனவுகளை நீங்கள் கண்டால் இதை கட்டாயமாக வெளியில் கூற வேண்டும்.

- Advertisement -

இந்த கனவுகளை வெளியில் கூறும் போது, அதிர்ஷ்ட கனவுகளை வெளியில் சொன்னால் எப்படி நடக்காமல் போகுமோ, அதைப் போல இந்த கனவுகளை வெளியில் கூறுவதால் இவைகளும் நடக்காமல், நமக்கு வரவிருக்கும் தீமை தடைப்பட்டு விடும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த கனவுகள் எந்த நேரத்தில் வந்தால் பலிக்கும் என்றும் உள்ளது. அதாவது அர்த்த ஜாமம் 12 மணிக்கு மேல் 4 மணிக்குள், இந்த நேரத்தில் வரும் கனவுகள் நல்லதாக, கெட்டதாக எதுவாக இருந்தாலும் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது. நான்கு மணிக்கு மேல் சூரிய உதயத்திற்குள் வரும் கனவுகளுக்கு பிரம்ம முகூர்த்த கனவுகள் என்று பெயர். இந்த கனவுகள் நடக்கும் வாய்ப்பு அதிகம், சூரிய உதயத்திற்கு பிறகு வரும் கனவுகள் பலிக்க வாய்ப்பில்லை.

- Advertisement -

அதே நேரத்தில் சில கனவுகளை நாம் கண்டிருப்போம் கண்விழித்ததும் என்ன கனவு கண்டோம், கனவில் என்ன நடந்தது என்று எதுவுமே நமக்கு புரியாது. இது போன்ற கனவுகளை குறித்து நம் கவலையை பட வேண்டியது இல்லை. இவைகள் நம் ஆழ்மனதும் குழப்பத்தின் காரணமாக தோன்றியது. இது கனவு சாஸ்திரத்திற்குள் வராது. இந்த கனவுகளை பற்றி நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தங்கம் மளமளவென்று பெருக பூஜை செய்யும் பொழுது இதை செய்ய மறக்காதீங்க! அடகு போகாமல் தங்கம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்க, நம் முன்னோர்களும் இதைத்தான் செய்தார்களா?

கனவுகளின் பலன் குறித்து அறிந்து கொண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் யோகம் தரக்கூடிய இதுபோல கனவுகள் வருந்தால் அதை வெளியில் பகிராமல் வைத்து அந்த யோகத்தை நீங்கள் முழுவதுமாக அனுபவித்து வாழுங்கள்.

- Advertisement -