கன்னி ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இவற்றை செய்தால் போதும்

kanni-rasi

ஜோதிட சாஸ்திரம் நவகிரகங்களில் புதன் பகவான் பாதி சுப கிரகமாகவும், பாதி பாபகிரகமாகவும் இருக்கிறார் என கூறுகிறது. இந்த புதன் பகவான் ஜாதகத்தில் சுப கிரகங்களுடன் சேர்ந்து இருப்பதும் அல்லது சுபகிரக பார்வை பெற்று இருப்பதும் சிறப்பானதாகும். புதன் கிரகத்திற்கு உட்பட்ட ராசிகளாக மிதுனம் மற்றும் கன்னி ராசிகள் இருக்கின்றன. இதில் கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டங்கள் மிகுந்த யோகமான வாழ்வை வாழ்வதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிடத்தில் கூறப்படும் 12 ராசிகளில் ஆறாவது ராசியாக வருவது கன்னி ராசியாகும். கன்னி ராசியை ஆளும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். இயற்கையிலேயே சிறந்த அறிவாற்றலும், பல கலைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் திறனும் கொண்ட கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுந்த யோகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது அவசியம்.

நவக்கிரகங்களில் புதன் பகவானுக்குரிய கோயிலாக மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை சென்று வழிபடுவது புதன் பகவானின் நல்லருளை உங்களுக்குப் பெற்றுத் தரும். புதன் கிழமைகள் தோறும் பச்சை நிற ஆடைகளை அணிவது உங்களுக்கு யோகங்களை ஏற்படுத்தும். விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் உங்கள் தாய்மாமன்களிடம் ஆசீர்வாதம் பெறுவது கன்னி ராசியின் புதன் கிரக தோஷங்களை போக்கும்.

Perumal

ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை தினத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாள் மற்றும் தாயாருக்கு பச்சை நிற ஆடைகளை சாற்றி வேண்டுவது, உங்களுக்கு மிகுதியான அதிர்ஷ்டங்களை நிச்சயமாக ஏற்படுத்தும் ஒரு பரிகாரமாக இருக்கிறது. இதே போன்று வளர்பிறை புதன் கிழமைகளில் உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அன்னதானம் அல்லது ஆடை தானம் வழங்குவது, கன்னி ராசியின் தோஷங்களை போக்கி நன்மைகளை ஏற்படுத்தும் மிகச் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kanni rasi tips in Tamil. It is also called Kanni rasi pariharam in Tamil or Jothida rasi pariharam in Tamil or Rasi pariharam in Tamil or Kanni rasi in Tamil.