உங்கள் குடும்பம் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டுமா? இன்று இரவு இதை மட்டும் செய்ய மறக்காதீங்க.

amavasai
- Advertisement -

நம்முடைய குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் எந்த கஷ்டமும் வராமல் இருக்க வேண்டுமென்றால் மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி கழிக்க மறக்கக்கூடாது. இன்று அமாவாசை. இன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் உங்களுடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த முறைப்படி திருஷ்டியை கழித்து விடுங்கள். உங்கள் குடும்பத்திற்கு ஒரு போதும் எந்த பிரச்சனையும் எந்த கஷ்டமும் வராது. திருஷ்டி கழிப்பதில் பல வகைகள் உண்டு. அதில் ஒரு சுலபமான சக்திவாய்ந்த முறையை பற்றித்தான் இன்று தெரிந்து கொள்ள போகிறோம்.

திருஷ்டியில் சுப திருஷ்டி, அசுப திருஷ்டி என்ற இரண்டு வகைகள் உண்டு. நமக்கு ரொம்பவும் பிடித்தவர்கள், நம் வீட்டில் இருப்பவர்களுடைய கண்களே, வீட்டிலிருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு கண் திருஷ்டியாக விழும். உதாரணத்திற்கு அம்மா அப்பாவே தன்னுடைய குழந்தையை பார்த்து பூரித்துப் போவார்கள். தன் குழந்தை அழகாக பேசுவதை பார்த்து, கண் திருஷ்டி வைத்துவிடுவார்கள். இதற்காகத்தான் திருஷ்டி கழிக்கும் போது முதலில் நம்முடைய பாட்டி ‘தாய் கண்ணு தகப்பன் கண்ணு போக வேண்டும்’ என்று சொல்லி திருஷ்டியை கழிப்பார்கள். இது சுப திருஷ்டி.

- Advertisement -

அடுத்தவர்களுடைய கண்கள் நம்மை பொறாமையோடு பார்ப்பது அசுப கண்திருஷ்டியில் வந்து சேரும். ‘இவளுக்கு மட்டும் எப்படித்தான் குறைந்த விலையில் அழகான புடவை கிடைத்ததோ. எப்படித்தான் இவள் மட்டும் 30 வயதில் கூட 20 வயது போல அழகாக இருக்கிறாளோ, எப்படித்தான் இவர்கள் குறைந்த சம்பளத்தில் இவ்வளவு சந்தோஷமாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார்கள்’. என்று அடுத்தவர்களுடைய கண் பார்வை குறுகுறுவென நம் மீது விழுவது அசுப திருஷ்டி.

இந்த இரண்டு திருஷ்டியையும் கழிப்பதற்கு பின் சொல்லக்கூடிய முறையை பின்பற்றினால் போதும். ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு, 3 வரமிளகாய், ஒரு கைப்பிடி அளவு சமையலுக்கு பயன்படுத்தும் கடுகு, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு சிறிய துண்டு படிகாரக்கல் இந்த பொருட்களை எல்லாம் வைத்து அந்த பேப்பரை அப்படியே மடித்து கொள்ள வேண்டும். உள்ளே இருக்கும் பொருட்கள் கீழே விழாதபடி.

- Advertisement -

உங்க வீட்டில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து வீட்டில் இருக்கக்கூடிய, மூத்தவர் தயார் செய்த மூட்டையை அவர்களுடைய கையில் வைத்துக் கொண்டு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை, சுற்றி அதன்பின்பு கையில் இருக்கும் அந்த காகித மூட்டையைப் ஒவ்வொரு நபரின் உச்சந்தலையிலும், பாதங்களிலும் வைத்து எடுத்து விட வேண்டும்.

அதன் பின்பு இந்த காகிதத்தை உள்ளே இருக்கும் பொருட்களோடு அப்படியே வீட்டிற்கு வெளியே கொண்டுபோய் வைத்து ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி கொடுத்து விடுங்கள். அவ்வளவு தான். உங்களை பிடித்த திருஷ்டி அனைத்தும் உங்கள் குடும்பத்தை விட்டு நீங்கிவிடும். குடும்பம் சந்தோசமாக இருக்கும். இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள், செய்ய தவறியவர்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை. நாளை இரவு 9 மணிக்கு கூட இந்த திருஷ்டி கழிக்கலாம். தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -