போகி அன்று காப்பு கட்டும் முறை

pongal kappu
- Advertisement -

மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டில் இருக்கக்கூடிய பழைய பொருட்களை எரித்து புதிய பொருட்களை வாங்கி வருவார்கள். அதனால் தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று போகி பண்டிகைக்குரிய வாசகம் ஒன்று ஏற்பட்டது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் போகி பண்டிகை அன்று காப்பு கட்ட வேண்டிய நேரம் மற்றும் முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

போகிப் பண்டிகை அன்று எப்படி வீட்டை சுத்தம் செய்துவிட்டு பழைய பொருட்களை தீக்கிரையாற்றுவோமோ அதே போல் தான் இவை அனைத்தையும் செய்து முடித்த பிறகு வீட்டில் காப்பு கட்டும் முறை என்பது இருக்கும். பொதுவாக நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இதில் பலவகையான மூலிகைகளை கலந்து காப்பு கட்டுவார்கள். அதன் மூலம் எந்த வித நோய் தொற்றும் வீட்டில் இருப்பவர்களை தாக்காமல் அது பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நாளடிவில் இதில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் படிப்படியாக குறைந்து இப்பொழுது மூன்றே மூன்று பொருட்களை மட்டுமே வைத்து காப்பு கட்டுவது என்பது நடக்கிறது. அதிலும் சில இடங்களில் வெறும் ஆவாரம் பூ மற்றும் வேப்பிலை மட்டுமே வைத்தும் கட்டும் பழக்கம் இருக்கிறது. அனைவரின் இல்லங்களிலும் கண்டிப்பான முறையில் காப்பு கட்டுவது என்பது இருக்க வேண்டும். வரும் காலங்களில் ஏற்படக்கூடிய நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவே அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் இந்த காப்பு கட்டும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

எந்த மூலிகை கிடைக்கிறதோ அதை வைத்து கண்டிப்பான முறையில் அனைவரின் இல்லங்களிலும் காப்பு கட்ட வேண்டும். எந்த மூலிகையும் கிடைக்கவில்லை என்றால் கூட வேப்பிலை மற்றும் மாவிலையை வைத்தாவது காப்பு கட்ட வேண்டும். அவ்வாறு காப்பு கட்டும் பொழுது அதற்குரிய நேரத்தில் காப்பு கட்டினால் அதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த காப்பு கட்டுவது என்பது பிரம்ம முகூர்த்த வேளையில் செய்ய வேண்டும் அல்லது காலை 7:35 மணியிலிருந்து 8:35 மணிக்குள்ளும், 10:15 முதல் 11:45 வரையும், மதியம் 1:30 முதல் 2:30 வரையும், மாலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள்ளும் காப்பு கட்டி விட வேண்டும்.

- Advertisement -

முடிந்த அளவிற்கு பகல் நேரங்களில் காப்பு கட்டுவது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். அவ்வாறு காப்பு கட்டுவதற்கு முன்பாக ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான நீரை பிடித்து அதில் மஞ்சள் தூளை போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் தண்ணீரை நிலை வாசலில் தெளிக்க வேண்டும் பிறகு வீட்டு வாசலில் தெளிக்க வேண்டும். அதற்குப் பிறகு இந்த காப்பு மூலிகைகளை கையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை பார்த்து இனிமேல் வரக்கூடிய காலங்களில் எங்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு நிலை வாசலில் இந்த காப்பை கட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பண விரயம் குறைய பரிகாரம்

பேருக்கு அனைவரும் வாங்கி வைக்கிறார்கள் என்பதற்காக வாங்கி வைக்காமல் அதனுடைய காரணத்தன்மையை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

- Advertisement -