பண விரயம் குறைய பரிகாரம்

pana virayam
- Advertisement -

பணத்தை சம்பாதிப்பது என்பது அனைவரும் மேற்கொள்ளும் செயல்தான். சம்பாதித்த அந்த பணத்தை சேமித்து வைப்பதும் சிக்கனமாக செலவு செய்வதும் நம் கையில் தான் இருக்கிறது. சேமிப்பை நாம் செய்ய வேண்டும் என்றால் வீண் விரயத்தை குறைக்க வேண்டும். நாமாக விரும்பி வீண்விரயம் செய்யாவிட்டாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மை வீண் விரயத்திற்கு ஆளாக்கும் பொழுது நம்மால் சேமிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த பரிகாரத்தை செய்து வீண் விரயத்தை குறைக்க முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பணத்தை சம்பாதிக்கும் அனைவராலும் பணத்தை சேர்த்து வைக்க முடியாது. சில பேரை கைராசி மிக்கவர் அவர் கையில் பணத்தை கொடுத்தால் அது பல மடங்காக சேரும் என்று கூறும் வழக்கம் இருக்கிறது. இதற்கு காரணம் அவர்கள் பணத்தை வீண்விரயம் ஆக்காமல் இருப்பது தான். நம்மை அறியாமலேயே தேவையில்லாத செலவுகள் வந்து கொண்டே இருக்கும் பொழுது அதற்கு பரிகாரங்கள் தான் நமக்கு உதவி செய்யும். இந்த பதிவில் இரண்டு பரிகாரங்களை நாம் பார்க்க போகிறோம். இரண்டும் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய பரிகாரங்கள் தான்.

- Advertisement -

அனைவரின் இல்லங்களிலும் கற்றாழை செடி வளர்க்கும் பழக்கம் இருக்கிறது. இந்த கற்றாழை செடியை நாம் ஒரு சிறிய தொட்டியில் வைத்து நம் வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து வளர்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் வீண்விரயம் ஏற்படுவது குறைய ஆரம்பிக்கும்.

அடுத்ததாக சனிக்கிழமை கையகலத்தில் இருக்கக்கூடிய பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு சோம்பு சேர்த்து, இரண்டு பச்சை கற்பூரத்தை வைத்து, மூன்று ஏலக்காயை அதனுடன் சேர்த்து வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூட்டையை நாம் எந்த இடத்தில் பணத்தை வைத்து செலவு செய்கிறோமோ அந்த இடத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

சேமித்து வைக்கும் இடத்தில் வைப்பதற்கு பதிலாக பணப்புழக்கம் இருக்கும் இடத்தில் அதாவது பணத்தை எடுத்து வைப்பது பிறகு செலவுக்காக எடுப்பது என்று இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி வைப்பதன் மூலமும் வீண் விரயத்தை தடுக்க முடியும். இந்த மூட்டையை மாதத்திற்கு ஒரு முறை மாற்றினால் போதும். இதில் இருக்கும் சோம்பு, ஏலக்காய் இவற்றை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு பச்சை கற்பூரம் கரையாமல் இருந்தாலும் அதையும் போட்டு விட வேண்டும்.

மறுபடியும் புதிதாக சோம்பு, பச்சை கற்பூரம், ஏலக்காய் இவற்றை அதே பச்சை நிற துணியில் வைத்து கட்டி பணப்புழக்கம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். மற்ற கிழமைகளில் செய்தால் அந்த அளவிற்கு பலன் இருக்காது.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் விலகி லஷ்மி கடாட்சம் ஏற்பட பரிகாரம்

மிகவும் எளிதில் அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த சின்ன சின்ன பொருட்களை பயன்படுத்தி நம்முடைய வீண் விரயத்தை நம்மால் கட்டுக்குள் கொண்டு வந்து பணத்தை சேமிக்கும் வாய்ப்பை பெற முடியும்.

- Advertisement -