ரொம்ப ரொம்ப ஈஸியா சுவையான கார போண்டா செய்வது எப்படி? ஈவ்னிங் டீ குடிக்கும் போது இந்த ஸ்நாக்ஸ் அட்டகாசமாய் இருக்கும்.

bonda8
- Advertisement -

வெறும் உளுந்தம் பருப்பை வைத்து தானே நம்முடைய வீட்டில் போண்டா செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கடலைப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை போண்டா செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வருவதற்கு 2 மணி நேரம் முன்பு பருப்புகளை ஊற வைத்தால் போதும். 10 நிமிடத்தில் சூப்பரான போண்டாவை சுட்டு எடுத்து விடலாம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிப்பிக்கு போவோம்.

முதலில் கடலைப்பருப்பு – 1 1/4 கப், உளுத்தம்பருப்பு – 1 கப், அளந்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக போட்டு நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். உரிய இந்த இரண்டு பருப்பையும் தண்ணீரை எல்லாம் சுத்தமாக வடிகட்டி விட்டு மிக்ஸியில் போட்டு இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு தண்ணீர் மட்டும் விட்டு மைய வெண்ணை போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த இந்த மாவை தனியாக அகலமான ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு விஸ்க் வைத்து மாவை அடித்துக் கலக்க வேண்டும். பத்து நிமிடங்கள் அடித்து கலக்கினால் மாவு புசுபுசுவென உபரியாக நமக்கு கிடைக்கும். அதாவது மாவை கிரைண்டரில் அரைத்து போலவே புசுபுசுன்னு இருக்கும்.

இப்போது போண்டா செய்வதற்கு மாவு தயார். இந்த மாவுடன் அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3, கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை, புதினா பொடியாக நறுக்கியது – 1/2 கைப்பிடி அளவு, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு உங்கள் கையை கொண்டு மாவை நன்றாக பிசைந்து கொடுங்கள்.

- Advertisement -

மாவை கலந்து விட்டதும் கையை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு, ஈரமான கையோடு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மாவை, உருண்டையாக உருட்டி சுட சுட எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மிதமான தீயில் பொரித்து எடுத்தால் சுவையான கார போண்டா தயார். (ஒவ்வொரு முறை போண்டா மாவை கையில் எடுக்கும் போதும், கையை தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். அப்போதுதான் மாவு கையில் ஒட்டாமல் வரும்.)

மாவு ரொம்பவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. ரொம்பவும் தளதளவெனவும் இருக்க கூடாது. கையில் எடுத்து உருட்டி போண்டா விடுமளவிற்கு மாவின் பக்குவம் இருக்க வேண்டும். மாவு ரொம்பவும் தண்ணி ஆகிவிட்டால் இன்னொரு 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். சூப்பரான வித்தியாசமான இந்த கார போண்டா ரெசிபியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. அத்தனை ருசியாக இருக்கும்.

- Advertisement -