ஹோட்டல் சரவணபவன் ஸ்டைலில் வெள்ளை வெளீர்ன்னு தேங்காய் சட்னி அரைக்க இந்த ஒரு சீக்ரெட் இன்கிரிடியன்ஸ் மட்டும் சேர்த்தால் போதும். அப்படியே ஹோட்டல் சுவைல மணக்க மணக்க தேங்காய் சட்னி ரெடியாகிடும்.

cocount Chutney
- Advertisement -

தேங்காய் சட்னியை பொருத்த வரையில் நாம் வீட்டில் எப்படி அரைத்தாலுமே கூட ஹோட்டல்களில் கிடைப்பது போல ருசியாக வராது. ஹோட்டல்களில் இந்த சட்னியை வெள்ளை வெளீர் என்று ஒரு வித வித்தியாசமான சுவையுடன் சாப்பிட ரொம்பவே பிரமாதமாக இருக்கும். இதை திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவோம். இப்படி ஒரு நல்ல சுவையான தேங்காய் சட்னியை ஹோட்டல் சரவண பவனில் செய்வது போல அதே ருசியுடன் வீட்டில் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த சட்னி அரைக்க முதலில் அரை மூடி தேங்காயை நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவும் போது கொஞ்சம் கூட கருப்பு இல்லாமல் துருவி கொள்ளுங்கள். அது மட்டும் இல்லாமல் இதற்கு பயன்படுத்தும் தேங்காய் அப்பொழுது உடைத்த புதிய தேங்காயாக தான் இருக்க வேண்டும். அப்போது தான் சட்னியின் சுவை மாறாமல் அப்படியே ஹோட்டல் ஸ்டைலில் இருக்கும்.

- Advertisement -

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய அரை மூடி தேங்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் மூன்று சின்ன வெங்காயம், ரெண்டு பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஐந்து பச்சை மிளகாய் ,ஐந்து புதினா இலைகள், அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் கல் உப்பு, மூன்று டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை என அனைத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். இந்த தேங்காய் சட்னியை பொறுத்த வரையில் தேங்காய் அளவு தான் அதிகமாக இருக்க வேண்டும் பொட்டுக்கடலையின் அளவு மிகவும் குறைவாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

இந்த சட்னி அரைப்பதற்கு நாம் எப்போதும் ஊற்றுவதைப் போல தண்ணீர் ஊற்றி அரைக்கக் கூடாது. அதற்கு பதிலாக காய்ச்சாத பச்சை பாலை ஊற்றித் தான் அரைக்க வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு பச்சை பாலின் வாடை பிடிக்கவில்லை என்றால் காய்ச்சிய பாலை ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். ஆனால் பால் ஊற்றி அரைக்கும் போது தான் ஹோட்டல் சுவையில் வெள்ளை வெளேர் என்று சட்னி கிடைக்கும்.

- Advertisement -

இப்பொழுது அரைத்த இந்த சட்னியை ஒரு பவுலுக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து சேர்த்து பொரிந்த பிறகு அரை டீஸ்பூன் சீரகம் இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்ட பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை, கால் டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சத்தான முளைகட்டிய பச்சைப் பயறு தோசை சுலபமாக செய்வது எப்படி? இது தெரிஞ்சா இனி இட்லி, தோசைக்கு உளுந்தை ஊற வைக்க மாட்டீங்க!

இந்த சட்னிக்கு சுட சுட இட்லி தோசை என எந்த டிபன் வகையாக இருந்தாலும் பிரமாதமாக இருக்கும். இந்த சட்னி செய்த பிறகு இட்லிக்கு சைட் டிஷ் சட்னியாக இருக்காது சட்னிக்கு தான் இட்லி சைடு டிஷ் ஆக இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -