நீங்க போட்டிருக்கும் தங்க நகை, கவரிங் நகை போல கருத்து போய் விட்டதா? அவைகளை 1 நிமிடத்தில் கைப்படாமல் புதுசு போல பளபளப்பாக மாற்ற இதோ ஒரு சூப்பரான ஐடியா.

gold
- Advertisement -

நம் அன்றாடம் போட்டு இருக்கக்கூடிய தங்க நகைகள் நாளடைவில் அதனுடைய பொலிவை இழந்து விடும். பார்ப்பதற்கு பள பளப்பாக இருக்காது. திருகாணியின் இடுக்கில், டிசைகளின் இடுக்கில் அழுக்குகள் போய் சேர்ந்திருக்கும். இப்படி வருட கணக்கில் நீங்கள் தினமும் பயன்படுத்திய நகையை, ஒரே நிமிடத்தில் புதுசு போல மாற்றுவதற்கு ரொம்ப ரொம்ப எளிமையான குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஒரு குறிப்பு அல்ல 2 குறிப்பு உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு எது மனதிற்கு பிடிக்கிறதோ அதை நீங்கள் பயன்படுத்தி பலன் பெறலாம். இதோ எளிமையான வீட்டு குறிப்பு உங்களுக்காக.

குறிப்பு 1:
இரண்டாவது குறிப்பை விட இந்த முதல் குறிப்பு ரொம்ப ரொம்ப முக்கியமான குறிப்பு. அழுக்காக இருக்கும் நகைகளை இந்த தண்ணீரில் போட்டு எடுத்தால் போதும். உடனே பளபளப்பாக மாறிவிடும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, சோடா உப்பு 1/2 ஸ்பூன், விம் லிக்விட் 1 ஸ்பூன், போட்டு நன்றாக தண்ணீர் தளதளவென கொதி வந்ததும், உங்களிடம் இருக்கும் 1 செட் கம்மல், 1 செட் செயின் இந்த இரண்டு நகைகளை அதில் போட்டு உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு தட்டு போட்டு மூடி அந்த தண்ணீர் சூடு தணியும் வரை நகைகளை அதிலேயே ஊற வைத்து விடுங்கள். அதன் பின்பு நகைகளை வெளியே எடுத்துப் பாருங்கள். உங்களுடைய நகை பளிச்சு பளிச்சென மாறி இருக்கும். பிறகு அதை நல்ல தண்ணீரில் கழுவி விடுங்கள். (இன்னும் கொஞ்சம் கூடுதல் நகைகள் இருந்தால் கூடுதலாக சோடா உப்பு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.) ரொம்பவும் டிசைன்களில் அழுக்கு ஒட்டி இருந்தால் மட்டும் பல் தேய்க்கும் பிரஷ்ஷை வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தால் நகை பாலிஷ் போட்டது போல மாறிவிடும். உங்களுடைய வீட்டில் விம் ஜெல் இல்லை என்றால் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவை போடலாம். பேக்கிங் சோடா எல்லா வீட்டுலையும் இருக்கும். ஆப்ப சோடா இருக்குதல்லவா அதுதான்.

இப்படி கழுவிய நகைகளை ஒரு துணியில் வைத்து நன்றாக துடைத்துவிட்டு அதன் பின்பு மீண்டும் அணிந்து கொள்ளுங்கள்.  பீரோவில் எடுத்து வைக்கக்கூடிய நகையாக இருந்தால் அந்த நகையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்கக் கூடாது. ஒரு நாள் முழுவதும் வெளியில் வைத்து நன்றாக ஆற வைத்து, அதன் பின்பு ஒரு டிஷ்யூ பேப்பரில் மடித்து டப்பாவில் போட்டு வைத்து விட்டால் நகை நீண்ட நாட்களுக்கு கருத்துப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

இதே போல தாராளமாக கல்லு வைத்த நகையை கூட சுத்தம் செய்யலாம். பிரஷ் வைத்து தேய்க்கும் போது ஜாக்கிரதையாக தேய்க்க வேண்டும். ரொம்பவும் மெல்லிசான டிசைன் இருந்தால் அது விட்டுப் போகும். கற்கள் இருந்தால் கீழே விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேபோல இந்த நகைகளை கழுவ பயன்படுத்தும் தண்ணீர், சுடு தண்ணீர் எல்லாமே உப்பு தண்ணீராக இருக்கக் கூடாது. குடிக்கின்ற நல்ல தண்ணீராக இருக்க வேண்டும்.

குறிப்பு 2:
சுடுதண்ணியில் நகையை போடுவதற்கு சில பேருக்கு பிடிக்காது. இருந்தாலும் ரொம்பவும் அழுக்கடைந்த நகையை மேலே சொன்ன முதல் குறிப்பை பின்பற்றி சுத்தம் செய்வது தான் சரி. விருப்பமில்லாதவர்கள் பின் சொல்லக்கூடிய குறிப்பை கூட பின்பற்றலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் வினிகர் 1 ஸ்பூன், விம் லிக்விட் அல்லது ஷாம்பு 1 ஸ்பூன், ஊற்றி நன்றாக கலக்க வேண்டும் தேவைப்பட்டால் இதில் இரண்டு ஸ்பூன் தண்ணீரை விட்டு கலந்தால் நுரை பொங்க ஒரு லிக்விட் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி கறுத்து போன உங்க பழைய வெள்ளி கொலுசை கூட, பத்தே நிமிஷத்துல புதுசு போல மாத்த பக்காவான ஐடியா இருக்கு வாங்க தெரிஞ்சிக்கலாம்.

இதில் நகைகளை முதலில் நன்றாக மூழ்க வைத்து 2 நிமிடம் ஊற வையுங்கள். அதன் பின்பு நகை மூழ்கும் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் இந்த நகைகளை ஊற வைத்து, அதன் பின்பு லேசாக பிரஷ் போட்டு தேய்த்து எடுத்தால் உங்களுடைய நகை புதுசு போல மாறிவிடும். மேலே சொன்ன குறிப்புகள் பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எப்போதுமே நீங்கள் அணிந்திருக்கும் செயின் கம்பல் வளையல் எல்லாம் புதுசு போலவே ஜொலிக்கும்.

- Advertisement -