நினைத்த காரியம் நினைத்தபடி நடந்து வெற்றி மேல் வெற்றி பெற விநாயகருக்கு இந்த மாலையை சாற்றி வணங்கினால் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.

vinayar success
- Advertisement -

ஒருவர் நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடித்து, அதில் வெற்றியும் கண்டு விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு யாரும் இந்த உலகில் இருக்க முடியாது. அப்படிப்பட்ட காரிய சித்தியை நாம் பெறுவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் விநாயகருக்கு எந்த மாலையை அணிவித்து நாம் வேண்டுதலை வைத்தால் நிறைவேறும் என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். ஒரு காரியம் நல்ல விதமாக நடைபெற வேண்டும் என்று நினைக்கும் பொழுது, நம் நினைவிற்கு வரக்கூடிய முதல் தெய்வம் விநாயகப் பெருமானே. காரிய சித்தி என்றவுடன் நம் ஞாபகத்திற்கு வருபவரும் விநாயகர் பெருமானே.

அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு நாம் அவருக்குப் பிடித்தமான இந்த மாலையை அணிவித்து, நம்முடைய வேண்டுதல் எதுவாக இருப்பினும், அந்த வேண்டுதலை வைத்தால் கண்டிப்பாக அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. தெய்வ வழிபாட்டில் முக்கியமான பங்கு வகிக்கக் கூடிய பொருள் தான் தேங்காய். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பொருளாகவும் தேங்காய் விளங்குகிறது. இந்த தேங்காயை வைத்து தான் நாம் விநாயகருக்கு மாலை அணிவிக்க வேண்டும். இந்த தேங்காய் மாலையை அணிவிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை கடைபிடிப்பதன் மூலம் அந்த தேங்காய் மாலை குரிய முழுமையான பலனும் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

தேங்காய் மாலை கட்டும் முறை:
சம அளவில் உள்ள தேங்காய்களை வாங்க வேண்டும். தேங்காயை சுற்றி இருக்கும் நாரை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தேங்காயின் குடும்பி கனமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் தேங்காயை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது ஈரப்பதமாக இருக்கும் பொழுதே தேங்காயில் அனைத்து இடத்திலும் மஞ்சளை தடவ வேண்டும். பிறகு தேங்காயை சுற்றி நான்கு இடங்களில் குங்குமம் வைக்க வேண்டும்.

இப்பொழுது கனமான ஒரு ஊசியை எடுத்துக் கொண்டு, அதில் சணலை கோர்த்து கொள்ள வேண்டும். தேங்காய்க்கும் தேங்காய் குடும்பிக்கும் இடையில் ஊசியை ஒரு முனையில் குத்தி மறுமுனையில் அதை வெளியில் எடுக்க வேண்டும். சணலின் ஒரு புறம் ஒரு முடிச்சை போட்டுக் கொண்டு தேங்காயை கொண்டு வந்து சேர்த்து, தேங்காயின் மறுபுறம் மற்றொரு முடிச்சு போட வேண்டும். பிறகு சிறிது இடைவெளி விட்டு ஒரு முடிச்சு போட்டு அடுத்த தேங்காயை கோர்க்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு ஒவ்வொரு தேங்காய்க்கும் நடுவில் இரண்டு முடிச்சுகள் இடம் விட்டு போட்டு மாலையாக தேங்காயை கோர்க்க வேண்டும். இந்த தேங்காய் மாலை எப்பொழுதும் ஒற்றைப்படையில் தான் இருக்க வேண்டும். சணல் தாங்கும் அளவிற்கு தேங்காய் எண்ணிக்கையை நாம் வைத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் தேங்காய் மாலை தயாராகி விட்டது. இந்த தேங்காய் மாலையை நாம் விநாயகருக்குரிய நாட்களில் அவருக்கு அணிவிக்கலாம். அதாவது திங்கட்கிழமை, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் அவருக்கு அணிவிக்கலாம். மேலும் நம்முடைய வேண்டுதல் நிறைவேறிய உடன் எந்த கிழமையாக இருந்தாலும் நாம் அவருக்கு இந்த மாலையை அணிவிக்கலாம்.

தேங்காய் மாலை அணிவதால் ஏற்படக் கூடிய பலன்கள்:
தேங்காய் மாலை அணிவிப்பதால் நமக்கு ஏற்பட்டிருக்கும் காரிய தடைகள் அனைத்தும் விலகும். மேலும் நமக்கு செல்வ செழிப்பு ஏற்படும். திருமண தடைகள் அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும். தெளிவான முடிவு எடுக்கும் திறமை மேலோங்கும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர். வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் அந்த வேண்டுதல்கள் நிறைவேறும்.

இதையும் படிக்காலமே: இன்று சொர்ண தேவதைக்கு விருப்பமான இந்த மலரை வைத்து மகாலட்சுமி தாயாரை பூஜித்தால் வீட்டில் தங்கம் மடமடவென்று சேர்வதோடு அடகில் இருக்கும் தங்க நகையும் விரைவில் வீடு திரும்பி விடும்.

விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான தேங்காயில் அவருக்கு மாலை அணிவித்து அவரை மகிழ்ச்சி அடைய செய்து அதன் மூலம் நாமும் நம் வாழ்வை மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

- Advertisement -