வீட்டை விட்டு வெளிய போறீங்களா? 100% வெற்றி கிடைக்க, இந்த 5 வழிமுறைகளை ஃபாலோ பண்ணுங்க போதும்!

vinayagar-vellam

ஏதாவது ஒரு விஷயத்தில் வெற்றியை நோக்கிய பயணம் ஒவ்வொரு நாளும் இருந்து கொண்டே தான் இருக்கும். வீட்டை விட்டு கிளம்பும் பொழுது போகிற காரியம் நல்லபடியாக நடக்க நம்மையே அறியாமல் நம் மனம் வேண்டிக் கொள்ளும். ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது, செய்கிற காரியம் வெற்றி அடைய, சில விஷயங்களை கடைபிடிக்கலாம். அன்றாடம் நாம் வேலைக்கு சென்றால் கூட இன்றைய நாள் முழுவதும் நல்ல படியாக அமைய இந்த விஷயங்களை செய்து பார்க்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அப்படியான நல்ல விஷயங்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

vellam

வீட்டை விட்டு கிளம்பும் பொழுது முதலில் ஒரு சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டு, தண்ணீர் குடித்து விடுங்கள். அதன் பின்பு நீங்கள் வெளியில் கிளம்புங்கள். இவ்வாறு செய்வதால் எடுக்கும் காரியம் நல்லபடியாக முடியும் என்பது நம்பிக்கை. இதைத்தான் ஒரு விளம்பர பதிவிலும் நல்ல காரியம் செய்ய இனிப்பு சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். இனிப்பு, செல்லும் காரியத்தை இனிப்பாக மாற்றும் என்பது ஐதிகம். அதனால் தான் அவ்வாறு கூறப்படுகிறது. இதற்கு அறிவியல் காரணமும் உண்டு. வெல்லம் சாப்பிடுவதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். இதனால் தெளிவான சிந்தனை இருக்கும் என்பதால் வெல்லம் சாப்பிடுவது நன்மைகளை தரும்.

பின்னர் உங்களுடைய கைப்பை அல்லது மணி பர்சில் ஐந்து கிராம்புகளை வைத்துக் கொண்டு புறப்படுங்கள். 5 கிராம்புகள் பணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது. மேலும் அதில் இருக்கும் தெய்வீக மணம் உங்களை எப்பொழுதுமே நேர்மறையாக வைத்துக் கொள்ளும். இதனால் எந்த விதமான பதட்டமும் இல்லாமல் நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் முன்னிறுத்தி செய்வீர்கள்.

அது போல் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கு நாம் பயணத்திற்கு கிளம்பும் பொழுது விநாயகப் பெருமானை வணங்கி விட்டு செல்வது நல்லது. முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை வணங்கி விட்டு எந்த ஒரு காரியத்தை நீங்கள் துவங்கினாலும் அது நிச்சயம் வெற்றி அடையும் என்பது ஐதீகம். நீங்கள் வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது விநாயகருக்கு ஒரு கற்பூரத்தை ஏற்றி விட்டு, ‘ஓம் கம் கணபதயே நம’ என்ற மந்திரத்தை 9 முறை சொல்லி விட்டு செல்லுங்கள். ஜெயம் நிச்சயம் உண்டாகும். நேரம் இருப்பவர்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு செல்லலாம்.

- Advertisement -

நீங்கள் வெற்றி அடையுமா? அடையாதா? என்கிற மனக்குழப்பத்தில் இருந்தால் சிறிது மிளகுகளை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். விநாயகரை வணங்கி விட்டு உங்கள் கைகளாலேயே அந்த மிளகை உங்கள் வீட்டு வாசலில் ஓரமாகப் போட்டு விட்டு பின்னர் செல்லுங்கள். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை பிறக்கும்.

Milagu

அதே போல் குளிர்ந்த தண்ணீர் அல்லது காய்ச்சாத பச்சை பாலை கொண்டு கைகளை அலம்பி விட்டு பின்னர் வெளியில் கிளம்பினால் செல்லும் காரியம் ஜெயம் உண்டாகும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நாம் போகிற காரியம் நல்ல விஷயத்துக்காக மட்டுமே இருக்கும் பட்சத்தில் இது போன்ற சில சூட்சம விஷயங்களை செய்து விட்டு கிளம்பினால் 100% பலன் அளிக்கும். குறிப்பாக சுப காரியங்கள் செய்வோர் இந்த முயற்சிகளை செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
வெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும்! உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.