கற்கண்டு வடை செய்வது எப்படி

karkandu vadai
- Advertisement -

சிற்றுண்டி வகைகளில் மிகவும் முதலிடத்தை பிடிக்கக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் வடை. வடையில் பல வகைகள் இருந்தாலும் அதில் மிகவும் பிரபலமாக தெரிவது உளுந்த வடை தான். உளுந்த வடைக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அப்படிப்பட்ட உளுந்த வடையை இனிப்பாக செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இனிப்பாக செய்யக்கூடிய பல உணவு சிற்றுண்டிகள் இருந்தாலும் புதிய முறையில் வடை பிரியர்களுக்காகவே செய்யக்கூடிய ஒரு கற்கண்டு வடையை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருமுறை இந்த கற்கண்டு வடையை வீட்டில் செய்தால் மறுபடியும் திரும்பச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்கே தோன்றும். அந்த அளவிற்கு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • உளுந்து – 1/4 கிலோ
  • கற்கண்டு – 1/2 கிலோ
  • பச்சரிசி மாவு – 1/4 கிலோ

செய்முறை

முதலில் உளுந்தை இரண்டு முறை சுத்தமாக கழுவி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய உளுந்தை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கற்கண்டை பொடி செய்து வைத்துக் கொண்டு அரைத்த அந்த உளுந்து மாவில் போட்டு மறுபடியும் அரைக்க வேண்டும்.

கற்கண்டு நன்றாக அரைந்த பிறகு இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த மாவில் கற்கண்டே போட்டு அரைத்ததால் மாவு தண்ணீராக இருக்கும். அதனால் அதில் பச்சரிசி மாவை கலந்து கொள்ள வேண்டும். நன்றாக கட்டி விழாத அளவிற்கு கரைத்து அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பார்க்கும் பொழுது அது வடை மாவு பதத்திற்கு இருக்கும்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து நன்றாக தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் எப்பொழுதும் போல் உளுந்த வடையை தட்டி போடுவது போல் போட வேண்டும். ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபுறமும் வேக விட வேண்டும். இரண்டு புறமும் நன்றாக சிவந்த பிறகு அதை எடுத்து தட்டில் வைத்து பரிமாறி விடலாம்.

பொதுவாக உளுந்த வடை என்று சொல்லும் பொழுது அதற்காக மிளகு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம் என்று பல பொருட்களை நாம் நறுக்கி மாவுடன் சேர்த்து செய்வோம். இவை அனைத்திற்கும் பதிலாக மிகவும் எளிமையான சுலபமான முறையில் இனிப்பு வடையை செய்யும் பொழுது நம்முடைய வேலை மட்டும் மிச்சமாவதோடு மட்டுமல்லாமல் அனைவரும் விரும்பி ருசித்து உண்பார்கள்.

இதையும் படிக்கலாமே: கற்றாழை பாயாசம்

வித்தியாசமான முறையில் அதேசமயம் எளிமையான முறையிலும் செய்யக்கூடிய இந்த கற்கண்டு வடையை நாமும் நம் இல்லங்களில் செய்து அனைவரின் பாராட்டை பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.

- Advertisement -