தொடரும் கெட்ட கர்மாவை தடுத்து நிறுத்த வழிபாடு.

prathiyagra
- Advertisement -

பிரத்தியங்கரா தேவி. யாராலும் வெல்ல முடியாதவள்ன்னு இந்த அம்பாளை சொல்லுவாங்க. நல்லவங்க கெட்டவங்க யாராயிருந்தாலும் இந்த அம்பாளின் பாதங்களைப் பிடித்துக் கொண்டால், அவர்களுக்கு நல்லதை வரமாக தரக்கூடிய சக்தி இந்த பிரத்தியங்கிரா தேவிக்கு உண்டு. வாழ்க்கையில் நீங்கள் முன் ஜென்மத்தில் முற்பிறவியில் செய்த கெட்டது, இந்த பிறவியில் கர்மாவாக தொடர்ந்து, தீராத துன்பத்தை அனுபவித்து வந்தீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு பிரத்தியங்கிரா தேவி வழிபாடு.

இந்த ஜென்மத்திலேயே நீங்கள் செய்த தவறு, உங்கள் அப்பா செய்த தவறு, உங்கள் தாத்தா செய்த தவறுக்கு இன்றைய தலைமுறை துன்பங்களை அனுபவித்து வருகிறது என்றாலும், அந்த துன்பத்திலிருந்து வெளிவரவும் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு பிரத்தியங்கிரா வழிபாடு.

- Advertisement -

போன ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவம் இப்போது உங்கள் குடும்பத்தை தொடர்ந்து வந்து கஷ்டத்தை கொடுத்தாலும் சரி, அல்லது இந்த ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவமே, உங்கள் குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுத்து வந்திருந்தாலும் சரி, இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்கள் உடனடியாக உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பிரத்தியங்கிரா கோவிலுக்கு தினமும் செல்லுங்கள்.

பிரித்திங்கரா தேவிக்கு விளக்கு ஏற்றி, சிவப்பு நிற பூக்களை வாங்கி கொடுத்து, அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். பிரத்தியங்கிராவிற்கு விளக்கு போடுங்கள். பிரத்யங்கிரா தேவிக்கு எதிராக முட்டிப்போட்டு அமர்ந்து மடி பிச்சையேந்தி, உங்கள் குடும்பம் பிரச்சினையிலிருந்து வெளிவர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால், உங்கள் குடும்பத்தை காப்பாற்றிய வேண்டிய வேலையை அந்த அம்பாள் பிரத்தியங்கிரா தேவி பார்த்துக் கொள்வார்.

- Advertisement -

எவ்வளவு பெரிய சங்கடத்தையும் சுலபமாக தீர்த்து விடுவாள் ஆனால் கஷ்டம் தீரும் வரை விடாமல் அந்த பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு போக வழிபாடு மேற்கொள்ளுங்கள். எப்படியோ இறைவனிடம் போராடி மண்டியிட்டு உங்களுடைய குடும்பத்தை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் செய்த தவறு என்ன என்று உங்களுக்கு தெரிந்து விட்டது. யார் மூலம் உங்களுக்கு சாபம் வந்தது என்று தெரிந்து விட்டது.

நீங்கள் செய்த அந்த கர்மாவை எல்லாம் வாழ்த்தாக மாற்ற வேண்டும். யாருக்கு நீங்கள் துரோகம் செய்தீர்களோ, அவர்களுடைய காலில் விழுந்து அவர்களுக்கு செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கேட்டு, பிராயசித்தம் தேடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைத்த சாபத்தை, கொஞ்சம் கொஞ்சமாக ஆசீர்வாதமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீண் விரைய செலவுகளை குறைக்கும் பரிகாரம்

யார் உங்களை திட்டி தூற்றி சாபம் கொடுத்தார்களோ, அவர்களது வாயால் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும்னு வாழ்த்தினாலே போதும். உங்கள் குடும்பத்தை தொடரும் கர்மா நீங்கிவிடும். மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை இருந்தால் வழிபாட்டை மேற்கொள்ளலாம். நீங்கள் எதை விதையாக விதைக்கின்றீர்களோ, அதுதான் நாளை வளர்ந்து வரும். அடுத்தவர்களுக்கு நல்லதையே செய்வோம். நல்லதே நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -