நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் உங்களுக்கு நல்லது நடக்க மாட்டேன் என்கிறதா? அப்படின்னா இதுதான் காரணமாக இருக்கும்! கண்டிப்பா இத செஞ்சு பாருங்க எல்லாமே மாறும்.

- Advertisement -

நாம் என்னதான் நல்லது செய்தாலும் நமக்கு என்று வரும் பொழுது எந்த ஒரு நல்ல விஷயமும் சில சமயங்களில் நடைபெறாமல் இருக்கும். நாம் நல்லது தானே செய்கிறோம்? ஏன் நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது? என்கிற அங்கலாய்ப்பு பலருக்கும் இருக்கக்கூடும். அத்தகையவர்கள் எத்தகைய பாவங்களை செய்து இருப்பார்கள்? முன்ஜென்ம கர்ம வினை பயன் தொடர்கிறதா? இந்நிலை மாற அவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் தான் என்ன? என்கிற அறியாத ஆன்மிகத் தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நாம் நல்லதே செய்து, நல்லதே நினைத்து நமக்கு நல்லது நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம் கர்மவினை பாவங்கள் மட்டுமே ஆகும். ஒரு சிலர் பாவங்களை செய்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு மேலும் மேலும் நன்மைகளும், அதிர்ஷ்டங்களும் போய் சேர்ந்து கொண்டே இருக்கும். அவற்றை மற்றவர்கள் பார்க்கும் பொழுது எப்படித்தான் இதெல்லாம் நடக்கிறதோ? கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்றெல்லாம் எண்ணத் தோன்றும்.

- Advertisement -

முன்ஜென்ம கர்ம வினை பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் நாம் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பது சாஸ்திரம் கூறும் நிதர்சனமான உண்மை ஆகும். எனவே நாம் இந்த ஜென்மத்தில் என்னதான் நல்லது செய்தாலும், கர்மவினை பாவங்களின் அடிப்படையில் நமக்கு கெட்டது பின் தொடர்ந்து கொண்டிருக்கும். இதை தவிர்க்க முடியாது தான் ஆனால் இதனை எளிய பரிகாரங்கள் செய்து நம்மால் நம் விதியை மாற்றி அமைக்க முடியும். ‘விதியை மதியால் வெல்ல முடியும்’ என்று கூறப்படுவது இதற்காகத் தான்.

எந்த ஒரு பாவத்துக்கும் பரிகாரம் என்கிற ஒன்று நிச்சயம் இருக்கும். இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே நமக்கு மிகவும் முக்கியம். எனவே எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் நம்மை துரத்தினாலும் நாம் அற நெறியில் இருந்து தவறி விட கூடாது. எப்பொழுதும் ஒழுக்கமாகவும், இறை சிந்தனையுடன், மற்றவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்கிற நல்ல மனதுடன் இருக்க வேண்டும்.

- Advertisement -

கடவுள் எவ்வளவு திருவிளையாடல்கள் நம் வாழ்க்கையில் புரிந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அதை அவரே நிறுத்தி வைக்கவும் செய்வார் என்கிற நம்பிக்கையோடு வாழ்க்கையை பயணிக்க வேண்டும். முன்ஜென்ம கர்ம வினைகளின் பாவங்களால் நல்லது நடக்கவில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் எளிதாக செய்யக்கூடிய பரிகாரம் தான் இது! ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரிய பகவானுக்கு நம் விதியை மாற்றி எழுதும் சக்தி உண்டு! காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு எப்பொழுதும் வெற்றி தான். அந்த வகையில் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு செம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கோதுமையை போட்டுக் கொள்ளுங்கள்.

சூரிய பகவானுக்கு உகந்த தானியம் கோதுமை ஆகும். செம்பு அல்லது பித்தளை பாத்திரம் எடுத்துக் கொள்வது நல்லது. கோதுமையை தண்ணீரில் கலந்து காலையில் எழுந்ததும் சூரிய உதயத்தின் பொழுது சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு இடது கையால் செம்பை பிடித்து வலது கையால் தண்ணீரை பூமியை நோக்கி விட வேண்டும். ‘ஓம் சூரிய தேவாய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்த பின்பு எல்லா தண்ணீரையும் கீழே கொட்டி விட்டு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விடுங்கள். இப்படி கோதுமையும், தண்ணீரும் இறைத்து சூரிய நமஸ்காரம் செய்யும் பொழுது முன்ஜென்ம பாவ வினைகளால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் யாவும் எளிதாக தீரும் என்கிறது ஆன்மீகம்.

- Advertisement -