முன்ஜென்ம கர்ம வினைகளால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட இந்த எளிய பரிகாரங்களை முறைப்படி செய்து வந்தால் போதும்

pariharam
- Advertisement -

மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எதிர்ப்புகள், குழப்பங்கள், கஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், நஷ்டங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் இவை அனைத்தும் அவர்கள் செய்த கர்ம வினைகளின் காரணமாகவே வருகின்றன. இதற்காக பரிகாரங்கள் செய்வதன் மூலம் வரக்கூடிய பிரச்சினைகளை எளிதாக நீக்கி விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பலரிடமும் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் சில குறிப்பிட்ட பூஜை முறை, விரதங்கள், பரிகாரத ஸ்தலங்கள் இருக்கின்றன. எனவே ஒவ்வொரு பிரச்சினைக்கும் அதர்கேற்ற பரிகாரங்களை முறையாக செய்வதன் மூலம் கர்ம வினைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். அவ்வாறு கர்ம வினைகள் தீர்வதற்காக செய்யக் கூடிய சில பரிகாரங்கள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fight-1

கர்ம வினைகள்:
மனிதன் தனது வாழ்வில் மூன்று விதமான கர்மவினைகளை அனுபவிக்கின்றான். அவை சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம்.

- Advertisement -

இதில் சஞ்சித கர்மம் என்பது ஒரு கரு உருவாகும் பொழுதே அதனுடன் சேர்ந்து உருவாவதாகும். அதாவது தாய், தந்தை, அவரது முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களில் இருந்தும், இந்த ஆத்மா பல ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியங்களிலிருந்தும் உருவாகும் கர்மவினைகளாகும்.

karma

பிராப்த கர்மம் என்பது ஒரு ஆத்மா பல ஜென்மங்களாக செய்த பாவ புண்ணியங்கள் மூலம் இந்த பிறவியில் கிடைக்கும் நன்மை தீமைகளாகும். இந்த கர்மாவால் கிடைக்கும் பலனை இந்த பிறவியில் தான் அனுபவிக்க வேண்டும்.

- Advertisement -

ஆகாமிய கர்மம் என்பது மேற்கூறிய கர்மவினைகளை கழிப்பதற்காக இப்பிறவியில் செய்யக் கூடிய பரிகாரங்கள் மூலமும் பிறருக்கு செய்யக்கூடிய தானங்கள் மூலமும் கிடைக்கப்பெறும் பலன்களாகும்.

homam

இந்த மூன்று கர்ம வினைகளிலிருந்து எவரொருவரும் தப்பிக்க முடியாது. எனவே இவற்றிலிருந்து விடுபட சில பரிகாரங்களையும், வழிபாடுகளையும் முறையாக செய்திடவேண்டும். பலருக்கு பரிகாரத்திற்கும், வழிபாடட்டிற்கும் இருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எனவே தான் செய்த பரிகாரம் பலிக்கவில்லை, பலன் கிடைக்கவில்லை என்று புலம்பி கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

வாழை மரத்திற்கு தாலி கட்டுவது, தோஷ நிவர்த்தி ஹோமம் செய்வது இவை அனைத்தும் பரிகாரங்களாகும். அதுபோல வழிபாடு என்பது தாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தாம் செய்த பாவங்களினால் கிடைக்கப்பட்ட பலன்கள் என்று மனதார உணர்ந்து இறை நம்பிக்கையுடன் பூஜைகள் செய்து, விலங்குகளுக்கும், இல்லாதவறுகளுக்கும் தானம், தர்மங்கள் செய்வதாகும்.

valai-maram

கர்ம வினைகளின் பாதிப்புகளிலிருந்து விடுபட செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரம்:
தானத்தில் எல்லாம் சிறந்த தானம் அன்னதானம் என்று அனைவரும் அறிந்ததே. வாய் வாழ்த்த விட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது அன்ன தானத்தின் சிறப்பை கூறும் பழமொழி. இதற்கேற்ப மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவை தானமாக கொடுப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

உங்கள் வீட்டில் தேவையற்றது என்று நீங்கள் தூக்கி எறியும் தேங்காய் ஓட்டில் சிறிதளவு தண்ணீரோ அல்லது அரிசியோ வைத்து ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள பறவைகளுக்கும், விலங்குகளுக்கு உணவு அளித்து வருதல் மிகவும் நன்மையை கொடுக்கும்.

kottaguchi

இவ்வாறு தேங்காய் ஓட்டில் அரிசி மற்றும் தண்ணீர் வைத்து தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் வைத்து வந்தால் பறவைகள் எப்போதும் உங்கள் வீட்டை சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். இவ்வாறு பறவைகள் எழுப்பும் ஒலி வீட்டை சுற்றி ஒலித்துக் கொண்டிருந்தால் மகாலட்சுமியின் அம்சம் எப்போதும் நமது வீட்டில் நிறைந்திருக்கும். இதனால் நமது கர்ம வினைகளால் உண்டாகும் தீமைகளில் இருந்து எளிதில் விடுபட முடியும்.

- Advertisement -