இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் கர்ம வினைகள் நீங்கி அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வாசலை தட்டும்

ilaneer
- Advertisement -

நமது பேச்சு முதல் செயல் என நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் தனித்தனியே எதிர் வினை அல்லது கர்மா உள்ளது. நமக்கான சுபகாரியங்கள் ஏதேனும் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டது என்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள் போன ஜென்மத்தில் நீ என்ன பாவம் செய்தாயோ! உனக்கு இவ்வாறு நடக்கிறது என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம்! இது உண்மைதான். நாம் முன் ஜென்மத்தில் செய்த கர்மவினையின் காரணமாகவே இந்த ஜென்மத்தில் இப்பிறவியை அடைந்துள்ளோம். நமது கர்மவினைகள் நல்லவையாக இருந்தால் நமக்கு நல்ல சுகபோக வாழ்க்கையும், நமது கர்ம வினை கெடுதலாக இருந்தால் மிகவும் துன்பப்படக் கூடிய வாழ்க்கையும் தான் அமைந்திருக்கும். இவ்வாறான கர்மவினைகள் அகன்று அதிர்ஷ்டம் உண்டாக நாம் செய்ய வேண்டிய இளநீர் பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

karma

கர்மா:
பலருக்கும் கர்மா என்றால் அதன் பொருள் தெளிவாக தெரிவதில்லை. முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் அந்தணர்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஒரு கழுகு தனது இறையாக இறந்த பாம்பை காலில் கவ்விக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்தப் பாம்பின் வாயிலிருந்து சிறு துளி விஷம் அந்தணர்கள் உண்ணும் உணவில் விழுந்துவிட்டது. இதனை அறியாத அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க அவர் அதனை சாப்பிட்ட உடனே இறந்து விட்டார்.

- Advertisement -

சித்ரகுப்தனுக்கு ஒரே குழப்பம் இந்த பாவத்திற்கான கர்மாவை எவருக்கு அளிப்பது என்று. எனவே அவர் தனது எஜமானரான எமதர்மனிடம் சென்று இதற்கான விடையை கேட்டார். எமதர்மனும் கழுகு தனது இரையை தான் தூக்கிச் சென்றது அவன் மீதும் தவறில்லை, பாம்பின் வாயிலிருந்து விஷம் கொட்டியதும் அதன் தவறில்லை, இதனை அறியாத அரசன் மீதும் எந்தவித தவறும் இல்லை. எனவே காலம் வரும் வரை காத்திரு. இதற்கான பதில் உனக்கு கிடைக்கும் என்று கூறினார்.

chithra guptan

சில நாட்கள் கழித்து அந்தணர்கள் சிலர் இந்த அரசனின் அரண்மனைக்கு செல்வதற்காக அங்கிருந்த ஒரு பெண்மணியிடம் வழி கேட்டனர். அதற்கு அந்தப் பெண்மணி பார்த்து கவனமாக இருங்கள். இந்த அரசன் அந்தணர்களை கொன்று விடுவான் என அவர் மீது பழி சுமத்தினாள். எனவே சித்திரகுப்தன் அந்தப் பாவத்திற்கான கர்மாவின் பலனிற்க்கு உரியவர் இந்தப் பெண்மணி தான் என்று அந்த கர்மாவை இந்தப் பெண்மணிக்கு அளித்துவிட்டார். எனவே ஒருவர் மீது நாம் தெரியாமல் பழி போடுவது என்பது தவறு செய்தவர்களை விட நம் மீதுதான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அறிந்தும் அறியாமலும் நாம் எந்த வித பாவமும் செய்யாமல் இருந்திட வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு நம்மை அறியாமல் செய்த பாவங்களை நம்மை விட்டு அகற்ற நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் நமது வீட்டின் வடக்கு திசை நோக்கி சென்று அங்கு இருக்கும் தென்னை மரத்தில் அல்லது வடக்கு திசையில் இருக்கும் இளநீர் கடையிலிருந்து ஒரு இளநீரை வாங்கி வரவேண்டும். அதனை பூஜை அறையில் ஒரு மஞ்சள் துணி விரித்து அதன் மீது வைத்து, இளநீர் முழுவதற்கும் மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, பின்னர் அந்த துணியை மூட்டையாக கட்டி கொள்ள வேண்டும். பிறகு தீபாராதனை காண்பித்து மகாலட்சுமி தேவியை மனதார வேண்டிக்கொண்டு இந்த மஞ்சள் மூட்டையை நம் வீட்டின் நிலை வாசற் படியில் கட்டிவிட வேண்டும்.

ilaneer

பின்னர் வாரம் ஒரு முறை கற்பூர ஆராதனை காட்டி வணங்கி வரவேண்டும். இளநீர் மிகவும் வீணாகி விட்டது என்றால் இவ்வாறு வேறு ஒரு இளநீரை வாங்கி இதே போல் மஞ்சள் துணியில் கட்டி மீண்டும் நிலை வாசலில் தொங்க விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகி அதிர்ஷ்டம் உங்கள் வீட்டை தேடி வரும்.

- Advertisement -