கர்நாடகா ஸ்டைல் தேங்காய் சட்னி எப்படி அரைப்பது? நாமும் தெரிந்து கொள்வோமா? இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைட் டிஷ்!

chutney
- Advertisement -

தேங்காய் சட்னி என்றாலே ஒவ்வொருவர் வீட்டில் ஒவ்வொரு விதமாக அரைப்பாங்க. அந்த வரிசையில் கொஞ்சம் வித்தியாசமான ஒரு தேங்காய் சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக கர்நாடகாவில் உள்ள சில ஹோட்டல்களில் இந்தச் சட்னி பிரபல்யமானது. சுலபமான சூப்பரான இந்த சட்னியை எப்படி செய்வது. நாமும் தெரிந்து கொள்வோமா. இந்த சட்னி இட்லி தோசைக்கு மட்டுமல்ல பொங்கல் பூரி ஊத்தப்பம் பணியாரம் இவர்களுக்கும் தோதாக தான் இருக்கும்.

verkadalai

அடுப்பில் ஒரு கடாயை வைத்து விடுங்கள். நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி அந்த எண்ணெய் காய்ந்ததும், வேர்க்கடலை – 3 டேபிள்ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, புதினா 10 லிருந்து 15 இலைகள், பச்சை மிளகாய் – 3, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளி இவைகளைப் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு நிமிடம் வரப்பட வேண்டும். வறுத்த வேர்க்கடலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வறுத்த வேர்கடலையை மீண்டும் எண்ணெயில் போட்டு ஒருமுறை வறுக்கும் போது அதனுடைய வாசம் அதிகரிக்கும்.

- Advertisement -

இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு, 2 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலையை கடாயில் சேர்த்து அந்த சூட்டிலேயே வதக்கி நன்றாக ஆற விட்டு விடவேண்டும். இந்த கலவையை மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல் 1/2 கப் சேர்த்து, 1/2 கைப்படி அளவு கொத்தமல்லி தழைகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை மொழுமொழுவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

mint-puthina-plant

இந்த சட்னியை தண்ணீர் ஊற்றி கரைக்கும் போது ரொம்பவும் கெட்டியாகவும் இருக்க வேண்டாம். ரொம்பவும் தண்ணீர் பதத்திலும் இருக்க வேண்டாம். சரியான பதத்தில் கரைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய் இந்த பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றுங்கள்.

- Advertisement -

இப்போது தட்டில் சுட சுட இட்லியை போட்டு அதன் மேலே இந்த சட்னியை ஊற்றி ருசித்துப்பாருங்கள். கமகம வாசத்துடன் வித்தியாசமான சுவையில் சூப்பரான தேங்காய் சட்னி எல்லோருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும். 2 இட்லி அதிகமாக உள்ளே இறங்குவது தெரியாது.

chutney

தேவைப்பட்டால் ஜீரணத்திற்கு இதில் ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் சேர்த்து கொள்ளலாம் பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாய் சேர்த்து இந்த சட்னியை அரைக்கலாம் அது உங்களுடைய விருப்பம். இந்த குறிப்பு பிடித்திருந்தால் நாளை காலை இட்லி தோசையுடன் இந்த சட்னியை செய்து கொள்ளலாம்.

- Advertisement -