உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு எறும்பு கூட வராமல் செய்ய இந்த கற்பூர கரைசலை இப்படி கொடுத்து பாருங்கள்! செடிகள் வளர மண் தொட்டியில் சாக்பீஸை புதைப்பது ஏன்?

rose-plant-karpooram-chalk
- Advertisement -

வீட்டில் தோட்டம் மற்றும் மாடி தோட்டம் போன்றவை பராமரித்து வருபவர்கள் செடிகள் நன்கு செழித்து வளர பல்வேறு வகையான யுக்திகளை கையாண்டு வருவது வழக்கம். ஒரு மனிதனுக்கு எப்படி உணவு அவசியமோ! அதே போல ஒவ்வொரு செடி வகைகளுக்கும் ஒவ்வொரு விதமான ஊட்டச் சத்துக்கள் கட்டாயம் தேவைப்படுகின்றன. எல்லா வகையான செடிகளும் தானாக வளர்ந்து விடுவது இல்லை, அதற்குரிய பராமரிப்பு இருக்கும் பொழுது தான் அது நமக்கு பன்மடங்கு லாபத்தை கொடுக்கிறது. அந்த வகையில் செடிகளுக்கு ஏற்படும் சில வகையான பாதிப்புகளுக்கு என்ன செய்யலாம்? மேலும் எறும்பு தொல்லையிலிருந்து முற்றிலுமாக விடுபட இந்த கற்பூர கரைசல் எப்படி பயன்படுத்துவது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

planting-water

செடிகளுக்கு சரியான பராமரிப்பு இல்லை என்றால் அது பல்வேறு விதமான ஊட்டச் சத்துக்களை இழக்க நேரிடுகிறது. அதில் குறிப்பாக சுண்ணாம்பு சத்து எனப்படும் கால்சியம் சத்து இழந்தால் செடிகள் வளர்ச்சி வெகுவளவு தடைபட்டு இறந்து விடக்கூடும் அபாயமும் உண்டு. சுண்ணாம்பு சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் செடியின் வளர்ச்சியை கண்டிப்பாக பாதிக்கும். மனிதனுக்கு எலும்புகள் வலுவுடன் இருக்க கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது. அதே போல தாவர வகைகளுக்கும் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படாமல் இருந்தால் தான் நன்கு செழித்து நிறைய பூக்களையும், நிறைய காய், கனிகளையும் நமக்கு கொடுக்கும்.

- Advertisement -

சுண்ணாம்புச் சத்து குறைபாடு ஏற்படும் செடிகளுக்கு முதல் அறிகுறியாக தோன்றுவது இலை சுருட்டல் தான். இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். பின்னர் இலைகள் சுருண்டு வளர்ச்சி தடைபடும். இலைகளின் நிறம் மஞ்சளாக மாறத் துவங்கும். மேலும் அடர்த்தியான பச்சை நிறமும் மங்கி வெளிறிப் போய் இருக்கும். இந்த அறிகுறிகள் தோன்றும் பொழுதே உங்கள் வீட்டு செடிகளுக்கு சுண்ணாம்பு சத்து குறைபாடு இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

chalk2

இந்த குறைபாட்டை நீக்க மாதமொருமுறை சிறிதளவு சுண்ணாம்பை தண்ணீரில் கரைத்து வேர்களுக்கு கொடுத்து வரலாம். இதற்கு பதிலாக தான் ஒரு சிலர் சாக்பீஸை மண்ணில் தோண்டி ஓரமாக புதைத்து விடுவார்கள். சாக்பீஸில் இருக்கும் சுண்ணாம்புச் சத்து செடியின் வேர்களுக்கு சென்று அதன் பாதிப்பை எளிதாக குறைத்துவிடும். இதனை மிகக் குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்துவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் தோட்டத்தில் எறும்புகளின் தொல்லை அதிகரித்து காணப்பட்டால் இந்த முறையில் வாரம் ஒரு முறை செடிகளுக்கு தண்ணீரை ஸ்பிரே செய்து பாருங்கள்.

- Advertisement -

கற்பூர கரைசல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சைக் கற்பூரம் – 10 கிராம், யூகலிப்டஸ் ஆயில் – 5ml, தண்ணீர் – 2 லிட்டர், சுண்ணாம்பு – அரை டீஸ்பூன், வேப்ப எண்ணெய் – 5ml, ஷாம்பூ – 1 ட்ராப்.

pachai-karpooram1

கற்பூர கரைசல் செய்முறை விளக்கம்:
முதலில் பச்சை கற்பூரத்தை 10 கிராம் அளவிற்கு எடுத்து நுணுக்கி நொறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த கற்பூரம் கரைவதற்கு யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது மெத்தலின் கொஞ்சமாக சேர்த்து கொள்ள வேண்டும். பச்சை கற்பூரம் கரைவதற்கு நிறையவே நேரம் எடுக்கும் எனவே ஒரு இரண்டு மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். பின்னர் இரண்டு லிட்டர் தண்ணீரில் இந்த கற்பூர கரைசல் சேர்த்து, அவற்றுடன் வேப்ப எண்ணெய், சுண்ணாம்பு, ஒரே ஒரு துளி ஷாம்பூ ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். ஷாம்பூ சேர்ப்பது மற்ற எல்லா பொருட்களும் ஒன்றுடன் ஒன்று சரியாக கலப்பதற்கு தான்.

plants-spray

சுண்ணாம்பு இல்லாதவர்கள் அதற்கு பதிலாக அரை மூடி எலுமிச்சை சாற்றை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் 2 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு இந்த கலவையை நன்கு வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு எல்லா வகையான செடிகளுக்கு மேலும் ஸ்பிரே செய்து வர வேண்டும். பூக்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் என எல்லா வகையான செடிகளுக்கும் இந்த கரைசலை ஸ்ப்ரே செய்து வந்தால் ஒரு எறும்பு கூட உங்கள் தோட்டம் பக்கம் எட்டிக்கூட பார்க்காது. எறும்புகள் மட்டுமல்ல எந்த வகையான பூச்சி, புழுக்களும் உங்கள் செடிகளை அண்டாது.

- Advertisement -